Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.7 லட்சம் சம்பளம்.. ஆனாலும் வேலையை உதறி UAE-யில் இருந்து வந்த ஐடி ஊழியர்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தை சேர்ந்த யுஎக்ஸ் டிசைனர் மாதம் ரூ.7.25 லட்சம் சம்பளத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றினார். ஆனால் 3 மாதத்திலேயே அவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். அவர் பணியை விட்டு 6 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது பலரது கவனத்தை பெற்றுள்ளது.

பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் UX டிசைனராக பணியாற்றி வருபவர்அட்வின் ராய் நீட்டோ. இவர் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர். இவர் பிஏ அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைன் படிப்பை கடந்த 2007 ம்ஆண்டில் முடித்தார். அதன்பிறகு 2008 ம் ஆண்டில் வெப் டிசைனராக பணிக்கு சேர்ந்தார். பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு மாறினார்.

why-i-left-rs-7-lakh-per-month-job-in-uae-bengaluru-google-employee-explain-in-his-instagram-post

பிறகு அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தில் கடந்த 2019 ம் ஆண்டில் சேர்ந்தார். அங்கு அவர் 3 மாதங்கள் பணியாற்றினார். பிறகு வெளியேறி மும்பையில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தில் பணியாற்றினார். தற்போது பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் UX டிசைனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் அட்வின் ராய் நீட்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நிறுவனத்தில் மாதம் ரூ.7.25 லட்சம் சம்பளத்தில் பணியாற்றியதாவும், 3 மாதத்தில் அந்த பணியை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். பணியை ராஜினாமா செய்து வெளியேறியதற்கு அவர் கூறிய காரணம் தான் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அட்வின் ராய் நீட்டோ, ‛‛ ஐக்கிய அரபு எமிரேட்சில் எனக்கான பணி விசாவுக்கு 5 மாதம் வரை காலம் எடுத்தது. ஆனால் நான் 3 மாதங்கள் மட்டுமே இருந்தேன். அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது. இது நமக்கான இடம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த முடிவுக்கு சில காரணங்கள் உள்ளன. அதிகப்படியான வேலை நேரம் இருந்தது. காலை 9 மணிக்கு பணிக்கு செல்லாவிட்டால் அரை நாள் விடுப்பு அமலுக்கு வரும். வேலைக்கான நல்ல சூழல் இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்கட்டமைப்பு நன்றாக உள்ளது. ஆனால் டெக்னாலஜி இன்னும் வளரவில்லை. பணம் பெரிய பிரச்சனை இல்லை என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்.

தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கும், நமக்கும் நீண்ட இடைவெளி இருந்தது. தலைமை பொறுப்புகளில் திறமையை விட அந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் நன்கு யோசித்து பார்த்தேன். பணம் முக்கியம் தான். ஆனால் எல்லாமே பணத்தால் கிடைக்காது என்பதை உணர்ந்தேன். இதனால் நான் பணியை விட்டு விலகினேன். இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உண்மையில் நம்பமுடியாத ஒரு இடம். குறிக்கோள், பாதுகாப்பு, வேலைவாய்ப்புகள் உள்ள இடமாக இருக்கிறது. இன்னும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் சாப்பிட்ட தரமான உணவுகள் அங்கு தான் கிடைத்தன'' என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு தற்போது பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் இந்த பதிவு லிங்க்ட்இன் பக்கத்திலும் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஒருவர், ‛‛ நான் கடந்த ஓராண்டாக அபுதாபியில் பணியாற்றி வருகிறேன். அந்த வகையில் இந்த பதிவுக்கு ஒப்புக்கொள்கிறேன்.

வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பணி இருக்கும். இதில் 3 மணிநேரம் உணவு இடைவேளை. நான் ஒப்பந்த அடிப்படையில் வந்ததால் என்னால் பணியை விட முடியவில்லை. அதன்பிறகு நான் பணியில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சியடைந்தேன். பலருக்கும் அங்கு பணிசெய்ய சொந்த காரணங்கள் இருந்தன. ஆனால் எனக்கு அப்படி எந்த காரணமும் இல்லை என்பதால் வந்துவிட்டேன். ஆனால் அங்கு நிறைய விஷயங்களை கற்றுக்கெண்டேன்'' என்று கூறியுள்ளார்.

அதேபோல், இன்னொருவர், ‛‛நீங்கள் சொன்னது அனைத்தும் சரி. மத்திய கிழக்கின் நாடுகளின் பெரும்பகுதியில் வேலை என்பது கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. பலரும் இதனை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது இல்லை. நீங்கள் பகிர்ந்து உள்ளீர்கள் நன்றி'' என்று கூறியுள்ளார். இன்னொருவரோ, ‛‛ டிசைன் துறை என்ற அடிப்படையில் நான் முழுமையாக உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இங்கு பணி நேரம் மிகவும் பைத்தியக்காரத்தனமாக உள்ளது. அதேபோல் இளைஞர்கள் இடைவிடாமல் பணி செய்ய வேண்டி உள்ளது. இப்போது பணம் தான் தேவையாக உள்ளது. ஒருநாள் அது மாறும் என நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+