அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடகா போலீஸ் அதிரடி வழக்கு! சித்தராமையாவுக்கு எதிராக என்ன சதி?
பெங்களூர்: கர்நாடகாவில் அமலாக்கத்துறை அதிகாரிகளான மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் அம்மாநில போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை அதிர வைத்துக் கொண்டிருக்கும் வால்மீகி வாரிய முறைகேடுகளுக்கு முதல்வர் சித்தராமையாதான் காரணம் என பொய்யான வாக்குமூலம் தர வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக, கர்நாடகா மாநில அரசின் சமூக நலத்துறை கூடுதல் இயக்குநரான, வால்மீகி வளர்ச்சி வாரியத்தின் முன்னாள் இணை இயக்குநர் கல்லேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து இருப்பது வால்மீகி வாரிய நிதி முறைகேடுகள். இந்த வாரியத்தின் அதிகாரிகளில் ஒருவரான சந்திரசேகர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக சந்திரசேகர் எழுதிய கடிதத்தில் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளை விவரித்திருந்தார்.

நாகேந்திரா கைது: இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார். பின்னர் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் இணைந்தது. முன்னாள் அமைச்சர் நாகேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
சித்தராமையாவுக்கு எதிராக சதி: அத்துடன் வால்மீகி வாரியத்தில் பணியாற்றிய அதிகாரிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகளின் போதுதான் முதல்வர் சித்தராமையாவை சிக்க வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சதித் திட்டத்தை அரங்கேற்ற முயற்சித்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதிகாரி புகார்: இந்த நிலையில்தான் வால்மீகி வாரிய முன்னாள் அதிகாரியும் தற்போது கர்நாடகா சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராகவும் இருக்கும் கல்லேஷ், ஷேசாத்திரிபுரம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். பின்னர் அந்தப் புகார் வில்சன் கார்டனுக்கு மாற்றப்பட்டது.
முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி- அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடகா போலீஸ் வழக்கு!
என்ன சதித் திட்டம்?: கர்நாடகா அரசு அதிகாரி கல்லேஷ் போலீசில் கொடுத்த புகார் விவரம்: வால்மீகி வாரிய நிதி முறைகேடு தொடர்பாக கடந்த 16-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். என்னிடம் 17 கேள்விகளைக் கேட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் 18-ந் தேதி மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது, வால்மீகி வாரிய பணம் எம்ஜிஎம் ரோடு வங்கி கிளைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. நாங்கள் சொல்வதைப் போல வாக்குமூலம் கொடுத்தால் உங்களை கைது செய்யமாட்டோம். இல்லை எனில் நாங்கள் கைது செய்தால் ஜாமீன் கூட கிடைக்காது. அதனால் வால்மீகி வாரியத்துக்குச் சொந்தமான பணத்தை முதல்வர் சித்தராமையாதான் பெங்களூர் எம்ஜிஎம் ரோடு வங்கிக் கிளைக்கு மாற்ற என்னிடம் கூறினார்; அதனால் வாரிய நிதியை அந்த வங்கி கிளைக்கு மாற்றினேன் என பொய்யான வாக்குமூலம் தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். ஆனால் பொய்யான வாக்குமூலம் தர முடியாது என நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். இதனையடுத்து என்னை கைது செய்து சிறையில் அடைப்போம் என தொடர்ந்து மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் மிரட்டி வருகின்றனர் என தெரிவித்திருந்தார்.
வழக்கு பதிவு: அமலாக்கத்துறை அலுவலகம் வில்சன் கார்டன் பகுதியில் அமைந்துள்ளதால் அப்பகுதி போலீஸ் நிலையத்தில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகளான மித்தல், முரளி கண்ணன் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications