ஏம்மா.. "இதெல்லாம்" ஒரு கம்ப்ளைன்ட்டா.. கணவருக்கு எதிரான மனைவி புகாரை தள்ளுபடி செய்த கோர்ட்
பெங்களூரூ: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கணவர் தன்னை துன்புறுத்துவதாக கூறி அவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
Recommended Video
மட்டுமல்லாது இதையெல்லாம் துன்புறுத்தலாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டடமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
அப்படி என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளைதத்தான் அந்த பெண் வைத்தார்? ஏன் நீதிமன்றம் அவரின் வழக்கை தள்ளுபடி செய்தது? இதெல்லாம் துன்புறுத்தலா எனும் கேட்கும் அளவுக்கு என்ன நடந்து என்பதை குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.

குற்றங்கள்
இந்தியாவில் சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறன. குறிப்பாக கொரோனா காலகட்டங்களில் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய மகளிர் ஆணையத்தின் தகவலின்படி கடந்த 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக சுமார் 31,000 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய 2014ம் ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகமாகும்.

வித்தியாசமான வழக்கு
இதன் தொடர்ச்சியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கணவன் தன்னை துன்புறுத்துவதாக வழக்கு தொடுத்திருந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் "இதையெல்லாமா வன்கொடுமைனு கொண்டு வருவீங்க" என்று மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. அப்படி என்னதான் அந்த பெண் கணவன் மீது குற்றம்சாட்டியிருந்தார்? ஏன் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

வழக்கு விவரம்
கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் இவ்வாறு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார், "எனது கணவர் என்னை உயர் கல்வி படிக்க வலியுறுத்துகிறார். மட்டுமல்லாது எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது என்பது குறித்தும் என்னிடமே தயக்கமில்லாமல் பேசி வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே என்னை கொடுமைப்படுத்திய எனது கணவர் மீது உரிய நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வெண்டும்" என்று கூறியுள்ளார்.

தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அதில், "நீங்கள் இருவரும் படித்தவர்கள். உங்களுடைய எதிர்காலம் குறித்து ஒருவருக்கொருவர் விரிவாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இந்நிலையில் கணவர், மனைவியை கல்வியை தொடர சொல்வதையும், வேலையில் சேர சொல்வதையும் கொடுமையாக கருத முடியாது" என்கிற கருத்தை அடிகோடிட்டு காட்டியுள்ளனர். அதேபோல, "குடும்ப நலன் கருதி குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து கணவன் தனது மனைவியிடம் பேசுவதையெல்லாம் கொடுமையாக கருத முடியாது.

சுட்டிக்காட்டல்
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த மொழியை மனைவியை கற்க சொல்வதில் எந்த தவறும் இல்லை" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கை பொறுத்த அளவில், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மனைவியிடம் கணவன் கூறுவதை துன்புறுத்தலாக கருத இயலாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் வன்கொடுமை என்பது வேறு வலியுறுத்தல் என்பது வேறு என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications