Bangalore: பெங்களூர் பஸ் ஸ்டாண்டு அருகே பட்டப்பகலில் நடந்த கொடூரம்! துடிதுடித்த மனைவி.. கணவன் செய்த படுபாதக செயல்
பெங்களூர்: பெங்களூரில் (Bangalore) பட்டப்பகலில் பேருந்து நிலையம் அருகே வைத்து பெண்ணை அவரது 2-வது கணவர் கத்தியால் குத்தி படுகொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பயணிகள் கண்முன்னேயே வெறிச்செயலில் ஈடுபட்ட பெண்ணின் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். பட்ட பகலில் பயணிகள் முன்பாக நடைபெற்ற இந்த கொலை வெறித் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள சுங்கடக்கட்டே பேருந்து நிலையத்தில் பட்ட பகலில் தனது மனைவியை கார் டிரைவர் கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ளார். பேருந்து நிலையத்தில் நின்றவர்களை பதறவைத்த இந்த கொடூர கொலை குறித்த விவரம் வருமாறு:-

கணவன் மனைவி இடையே வாக்குவாதம்
கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்தவர் ரேகா. கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வரும் ரேகா, இவரது கணவர் லோஹித்ஷ்வா. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். திருமணத்திற்கு பிறகு கேப்பஹெல்லியில் வசித்து வந்தனர். ரேகா, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே தனது கணவருக்கு வேலை கிடைக்க பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, அந்த நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார் லோஹித்ஷ்வா. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று சுங்கடக்கட்டே பேருந்து நிலையம் அருகே தனது மகளுடன் ரேகா சாலையை கடக்க காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கணவர் லோஹித்ஷ்வா தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
பொது இடம் என்றும் பாராமல் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லோஹித்ஷ்வா, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கொடூரமாக குத்தினார். தாலி கட்டிய மனைவி என்றும் பாராமல், கண் மூடித்தனமாக ஆத்திரம் தீரும் வரை லோஹித்ஷ்வா 11 முறை கத்தியால் குத்தினார். அருகில் நின்ற மகள் தாயை காப்பாற்ற முயன்றார்.
ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த ரேகா, நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பட்டப்பகலில் பயணிகள் முன்பாக நடைபெற்ற இந்த கொலை வெறித் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமாவில் கூட பார்க்க முடியாத காட்சிகளை நேரில் பார்த்ததால், ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போனர். பின்னர் சுதாரித்த பயணிகள், மனைவியை கத்தியால் குத்திய லோஹித்ஷ்வாவை பிடிக்க முயன்றனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அதற்குள் லோஹித்ஷ்வா அங்கிருந்து தப்பி ஒட்டம் பிடித்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் நிகழ்விடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ரேகாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ரேகா உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைமறைவான லோஹித்ஷ்வாவை போலீசார் தேடி வருகின்றனர். ரேகா கொலை செய்யப்பட்டதால், அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தின் முக்கிய சாட்சியாக உள்ள மகளுக்கு கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும், அவரிடம் பிறகு வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications