Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு வருடமாய் உடலுறவுக்கு மறுக்கும் கணவர்! போலீசுக்கு ஓடிய இளம்பெண்.. பரபரத்த பெங்களூர்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மனைவி அன்பாக பேசினாலும் கூட தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடாமல் கோபத்தை கொப்பளித்து வந்த கணவர் மீது போலீசில் பரபரப்பாக புகார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை அதிரவைத்த இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

திருமணம்.. இருமனங்கள் ஒன்றாக இணைய ‛உனக்கு நான், எனக்கு நீ' என்ற உறுதிமொழியோடு ஆண், பெண்ணையும், பெண் ஆணையும் ஏற்றுக்கொள்வது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி தங்களின் கணவர், மனைவியின் மனதை புரிந்து கொண்டு செயல்பட்டால் திருமணம் எனும் இல்லறம் வயது முதிர்ந்து நரை தோன்றினாலும் கூட இனிமையாக தான் இருக்கும்.

Woman files complaint against husband who refuses sex for a year in Bengaluru

ஆனால் தற்போதைய காலத்தில் திருமண உறவில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்களை தீர்க்க ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தாலே போதும். ஆனால் இதனை பலரும் பின்பற்றுவது இல்லை. இதனால் தான் திருமண பந்தம் பாதியில் முறிந்து விடுகிறது. இதனை சரிசெய்வது என்பது சம்பந்தப்பட்ட நபர்களின் கைகளில் தான் உள்ளது.

இந்நிலையில் தான் பெங்களூரில் திருமணமான புதுமண தம்பதியின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது வாலிபர். இவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே தங்கி பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணம் என்பது இருவீட்டாரின் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது.

இதையடுத்து அந்த வாலிபர் தனது மனைவியுடன் பெங்களூரில் வசித்து கொண்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் அந்த வாலிபர் தனது மனைவியிடம் முகம் கொடுத்து பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அதிகமாக கோபப்பட்டுள்ளார். அதோடு தாம்பத்தியத்தையும் தவிர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் மிகவும் வருத்தமடைந்தார். பிறந்த வீட்டில் இருந்து அனைவரையும் பிரிந்து பெங்களூரில் வசித்து வரும் நிலையில் கணவரும் அவருக்கு ஆதரவாக இல்லாததால் விரக்தியடைந்தார்.

Woman files complaint against husband who refuses sex for a year in Bengaluru

மேலும் கணவரிடம் அவர் அன்பாக பேச பல முறை முயற்சிகள் செய்துள்ளார். ஆனால் அவரது கணவர் பிடிகொடுக்கவில்லை. திருமணம் முடிந்து ஓராண்டு ஆகியும் கூட தாம்பத்திய வாழ்க்கையில் அவர் ஈடுபடவில்லை. அதோடு தனது கோபத்தையும் அவர் குறைக்கவில்லை. இதனால் தனது கணவரை பிரிந்து செல்ல இளம்பெண் முடிவு செய்தார்.

இதற்காக அவர் விவாகரத்து கோரினார். ஆனால் அந்த வாலிபர் விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. விவாகரத்து மனுவிலும் கூட கையெழுத்து போட அவர் மறுத்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த இளம்பெண், சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்தார். பெங்களூர் பரப்பனஅக்ராஹாரா போலீசில் அந்த இளம்பெண் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

எனக்கும் எனது கணவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அவர் தாம்பத்தியத்துக்கு மறுக்கிறார். மேலும் அதிகப்படியாக கோபப்படுகிறார். நான் பலமுறை அன்பாக பேசினேன். ஆனால் அவர் தனது செயல்பாட்டை மாற்றவில்லை. எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி சரியாக இல்லை. இதனால் விவாகரத்து கேட்டபோது கையெழுத்திட மறுக்கிறார்'' என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பல வழக்குகளில் தாம்பத்தியம் குறித்து நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன. சமீபத்தில் கூட அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, ‛‛எவ்வித காரணமும் இன்றி வாழ்க்கை துணையுடன் நீண்ட காலம் உடலுறவை மறுப்பது என்பது அவர்களை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம்'' என தெரிவித்து இருந்தது. அதேபோல் டெல்லி நீதிமன்றமும் கூட ‛‛இணைந்து வாழும் தம்பதிக்கு இடையே, ஓராண்டாக உடலுறுவுக்கு மறுப்பது என்பது கொடூரத்திற்கு சமம்'' என வழக்கு ஒன்றில் தெரிவித்து இருந்தது என்பது நினைவுக்கூறத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+