பெங்களூரு: பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொடூர சித்ரவதை - 6 பேர் கைது
பெங்களூருவில் பெண் ஒருவர் சித்ரவதை செய்து பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்து கொடூரமாக சித்ரவதை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் மர்ம உறுப்புகளில் பாட்டிலை அடைத்து சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவை பார்த்து பலரும் பதற்றமடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டார். 22 வயதான அந்த பெண்ணை கொடூர கும்பல் ஒன்று பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாது பாட்டிலை சொருகி சித்ரவதையும் செய்தது.

அந்த வீடியோப் பார்த்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளியாகின. குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள். அந்த பெண்ணும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்தான். பணப்பிரச்சினையில் அந்த பெண்ணை இவ்வாறு கொடூர சித்ரவதை செய்துள்ளனர்.
6 பேரை கைது செய்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெங்களூரு போலீசார் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள் கொடூர குற்றத்தை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications