பார்க்குக்கு வந்த பெண்.. டக்கென அத்துமீறிய இளைஞர்.. நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற பொதுமக்கள்..!
பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் தாக்கி உள்ளனர்
பெங்களூரு: ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, அந்த நபரை அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது.. விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் மேக்ராஜ்.... இவர் ஹசன் நகரில் கட்டுமான தொழில் செய்து வருகிறார்...
சம்பவத்தன்று ஹசன் நகிரின் மகாராஜா பார்க் பகுதியில் மேக்ராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் பெண் ஒருவர் எதிரே வந்துள்ளார்..

அத்துமீறல்
அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு, அத்துமீறியதாக கூறப்படுகிறது.. இதை பார்த்த பொதுமக்கள் மேக்ராஜை பிடித்து கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.. அத்துடன் அவரை போலீசில் கொண்டு போய் ஒப்படைக்காமல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில், மேக்ராஜை கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர்.. அவரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாகவும் அழைத்து சென்றுள்ளனர்..

புகார்
அரை நிர்வாணமாக சாலையில் இழுத்து செல்லும் தகவல் போலீசாருக்கு சென்றதுமே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. மேக்ராஜை உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.. இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து தன்னை கொடூரமாக தாக்கி பொது இடத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக மேக்ராஜ் போலீசாரிடம் புகார் தந்தார்..

அரை நிர்வாணம்
அந்த புகாரின்பேரில், மேக்ராஜை தாக்கிய, அடையாளம் தெரியாத 4 பேர் மீது, ஹசன் நகர போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.. நடுரோட்டில் இளைஞர் ஒருவரை அரைநிர்வாணமாக தாக்கி இழுத்து செல்லும் காட்சிகள் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி வருகிறது.. இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் சொல்லும்போது, "கொடூரமாக தாக்கப்பட்ட அந்த நபர் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த மேக்ராஜ் என்பவர் ஆவார்.

புகார்
ஹசன் நகரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்... பூங்காவில் இருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்... அதனால் ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.. மேக்ராஜை போலீஸாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அந்த கும்பல் அவரைத் கடுமையாக தாக்கி, அரை நிர்வாணப்படுத்தி, பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் அவரை ஊர்வலமாக அழைத்து சென்றிருக்கிறார்கள்.. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications