சேட்டை ஓவராயிடுச்சு.. நாக பாம்புக்கு கேக் ஊட்டிவிட்டு பர்த்டே கொண்டாட்டம்.. நடந்ததை பாருங்க
பெங்களூர்: இந்த இளைஞர்களுக்கு சேட்டை ஓவராயிடுச்சு.. நாக பாம்புக்கு கேக் ஊட்டிவிட்டு பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க.. இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது.பலரும் அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த காலத்தில் செல்போன் வச்சிருக்குற ஒவ்வொருத்தரும், அதில் வீடியோ எடுத்து ரீல்ஸ் என்ற பெயரில் செய்யும் சேட்டை ஓவராகிவிட்டது. பலரும் வீட்டில் அன்றாட நடவடிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

தம்பிக்கு டிரஸ் எடுக்க போனாம். பாப்பாவுக்கு ஸ்கூலில் இன்னைக்கு இந்த ஸ்னாக்ஸ் கொடுக்குறோம்.. பக்கத்துவிட்டு ராஜியக்கா மகளுக்கு குழந்தை பிறந்திருக்கு..இன்னைக்கு சன் டிவியில் இந்த சீரியல் போட்டாங்க.. வீட்டில் ஒரே சண்டை... என் கணவருக்கும் எனக்கும் இந்த சாப்பாடு பிடிக்கும்.. அவரு இப்படித்தான். இவரு இப்படித்தான்.. என பலரும் அன்றாடம் வீடுகளில் நடப்பதை, பேசுவதை, பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவது போல் பேசி, ரீல்ஸ் ஆக வெளியிடும் அளவிற்கு நிலைமை போய்விட்டது . வீட்டில் சாப்பாடு முதல் கடைசியில் தூங்கும் வரை ரீல்ஸ் போட்டு அதிலேயே வாழ்பவர்கள் அதிகரித்து விட்டார்கள்.
இன்னொரு பிரிவினர், வாகனங்களை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று இயற்கையை ரசித்தபடி அதனை வீடியோவாக போடுவதை வழக்கமாக்கிவிட்டார்கள். எல்லாம் மொபைல் வீடியோக்கள் தான்.. இது ஒருபுறம் எனில் செல்போனை வைத்து சிலர் குறும்புத்தமானமாக சேட்டைகள் செய்து வீடியோவும் வெளியிடுகிறார்கள். அவர்கள் எடுத்து வெளியிடும் வீடியோ யாரையும் பாதிக்காத வரையில் எந்த பிரச்சையும் இல்லை. ஆனால் யாரையாவது பாதித்தாலோ அல்லது விலங்குகளை பாதித்தாலோ நிச்சயம் சிக்கல் தான்.
Height of birthday celebration 😀😳! pic.twitter.com/GXhhGRTjQG
— Vishweshwar Bhat (@VishweshwarBhat) August 21, 2023
அப்படித்தான் கர்நாடகாவில் இளைஞர்கள் பாம்புக்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்கள். ஹேப்பி பர்த்டே பாடல் பாடி, நாகப்பாம்பினை பின்னந்தலையை அமுக்கி கேக்கிற்குள் தலையை முக்கி அதை சாப்பிட கட்டாயப்படுத்தி உள்ளார்கள். அந்த நாகப்பாம்புக்கு பிறந்த நாளை கொண்டாடியதை வீடியோ எடுத்து அந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது அவர்களுக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது. அப்படி துன்புறுத்தினாலோ, அப்படி துன்புறுத்தும் காட்சிகளை வெளியிட்டாலோ அவர்கள் மீது கண்டிப்பாக வனத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியும். இந்நிலையில் நாகப்பாம்புக்கு இளைஞர்கள் கேக் ஊட்டி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த இளைஞர்கள் சிக்கலை சந்தித்துள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications