ஆரணி தொகுதியை வாங்கித்தர பாஜக பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் மாஜி உதவியாளர் கைது
ஆரணி தொகுதியில், எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக சொந்தக் கட்சிக்காரரிடமே ரூ,50 லட்சம் மோசடி செய்து, தலைமறைவான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர், பாண்டிபசார் போலீசார் ஹைதராபாத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஆரணி பாஜக பிரமுகரிடம் பணமோசடி செய்த மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர்
திருவண்ணாமலை, ஆரணி, ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் புவனேஷ் குமார்(29), இவர், ஆரணி பாஜக நகர தலைவராக உள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், பாஜக அதிமுக கூட்டணியில் ஆரணியில் போட்டியிட ஆசைப்பட்டார், அதற்காக, சென்னை, பெரம்பூர், அதிமுக வடசென்னை மாவட்ட நிர்வாகி விஜராமனை சந்தித்தார். பின்னர் இருவரும் அப்போதைய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் நரோத்தமனிடம் அணுகியுள்ளனர்.

தொகுதி வாங்கித்தர ரூ.1 கோடி லஞ்சம்
நரோத்தமன் தனக்கு செல்வாக்கு இருப்பதாக தெரிவித்து, ஆரணி தொகுதியில் போட்டியிட தன்னால் எம்.எல்.ஏ சீட் வாங்கி தர முடியும் எனக்கூறி அதற்கு செலவாகும் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் ரூ. 1 கோடி பேரம் பேசி, முதல் தவணையாக ரூ.50 லட்சம் தரவேண்டும், வென்றப்பின் மீதி ரூ.50 லட்சத்தை தரவேண்டும் என ரூ. 50 லட்சத்தை தி.நகரில் ஓட்டல் ஒன்றில் வைத்து, புவனேஷ்குமார், நரோத்தமன், விஜயராமன் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் கொடுதுள்ளார்.
திருவண்ணாமலை தொகுதியில் தங்கைக்கு
ஆனால், ஆரணி தொகுதி அதிமுக கூட்டணிக்கு மீண்டும் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கே ஒதுக்கப்பட்டது. திருவண்ணாமலை தொகுதியில், புவனேஷ் குமார் தங்கை வசந்திக்கு பெற்று தருவதாக கூறி, அதையும் அவர் செய்யவில்லை. அங்கு பாஜக வேட்பாளராக தங்கவேல் என்பவர் போட்டியிட்டார்.
பணமோசடி , கொலை மிரட்டல்
இதனால் ஏமாற்றமடைந்த , புவனேஷ்குமார், நரோத்தமனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால், பணத்தை திருப்பித்தராமல் பணம் கேட்ட புவனேஷ்குமாரை, நரோத்தமன், அவரின் தந்தை சிட்டிபாபு ஆகியோர் மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர், இதையடுத்து, புவனேஷ் குமார் பாண்டி பசார் போலீசில் புகார் கொடுத்தார், புகாரைப்பெற்ற போலீசார், நரோத்தமன், சிட்டிபாபு, விஜயராமன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மடக்கி பிடித்த பாண்டிபசார் போலீஸார்
அதற்குள் நரோத்தமன், சிட்டிபாபு இருவரும் தலைமறைவாகி விட்டனர், இதையடுத்து, தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். அவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீஸார் ஹைதராபாத் சென்று அங்கு பதுங்கியிருந்த நரோத்தமன், சிட்டிபாபுவை கைது செய்தனர். இன்று மாலை சென்னை அழைத்து வருகின்றனர்.
சொந்தக்கட்சிக்காரரிடமே பணமோசடி, கொலை மிரட்டல்
பாஜக மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர், தேர்தல் பொறுப்பாளராக வந்த அமைச்சரின் உதவியாளராக இருந்தவர் சொந்தக் கட்சியின் பிரமுகரையே மோசடி செய்து பணத்தையும் திருப்பித்தராமல் கொலை மிரட்டல் விடுத்து கைதாகியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
மனைவி ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்னால் செல்லுபடி ஆகுமா! நீதிமன்றம் சொன்ன அதிரடி பாயிண்ட்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications