சிலிண்டர் பிரச்சனையை தீர்க்க வந்த சூப்பர் ஹீரோ.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மத்திய கிழக்கில் 6 வாரங்களுக்கு மேலாக நடந்த வரும் போர் மற்றும் போர் கட்டுப்பாடுகள் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. பல இடங்களில் கமர்சியல் சிலிண்டர் இல்லாமல் ஹோட்டல்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தையும் பாதுக்காக்க மார்ச் 23 முதல் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் 5 கிலோ சிறிய எல்பிஜி சிலிண்டர்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த வாரம் திங்கள்கிழமை மட்டும் 1.1 லட்சம் சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன. மார்ச் 23 முதல் இதுவரை மொத்தம் 14.3 லட்சம் சிலிண்டர்கள் விற்பனையாகியுள்ளன என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு பிப்ரவரியில் 5 கிலோ சிறிய சிலிண்டர்களின் தினசரி சராசரி விற்பனை 77,000 ஆக இருந்தது. திங்கள்கிழமை இது 1.1 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த சிறிய சிலிண்டர்கள் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிலிண்டர் கிடைக்காமல் இருக்கும் வேளையில் பல பணி செய்யும் இடத்தை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்வது அதிகரித்து வந்த நிலையில் இந்த 5 கிலோ சிலிண்டர் ஏதுவான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 14.2 கிலோ சிலிண்டரை 3 ஆக பிரித்து அளிக்கும் காரணத்தால் உடனடி மற்றும் தற்காலிக தீர்வாக இந்த சோட்டு சிலிண்டர் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் 5 கிலோ சோட்டு/மினி எல்பிஜி சிலிண்டர்கள் பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு அளிக்கப்படுகின்றன. அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும் 5 கிலோ சிலிண்டர் எளிதாக வாங்கலாம். இன்டேன், பாரத் கேஸ், எச்பி கேஸ் ஆகிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள், சில்லறை கடைகள் மற்றும் சில சூப்பர்மார்க்கெட்டுகளில் இந்த சிலிண்டர்கள் கிடைக்கின்றன. எடுத்துச் செல்லவும், ரீஃபில் செய்யவும் மிகவும் எளிதானவை.
தொழில்துறை பயன்பாட்டுக்கான ஆன்லைன் எல்பிஜி புக் செய்யும் விகிதம் திங்கள்கிழமை 98 சதவீதமாக உயர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அடிப்படையில் டெலிவரி 92 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் மார்ச் 2026 முதல் 4.4 லட்சம் புதிய பைப் நேச்சுரல் கேஸ் (பிஎன்ஜி) இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. 4.88 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் 33,000க்கும் மேற்பட்டோர் தங்கள் எல்பிஜி இணைப்புகளை MYPNGD.in இணையதளம் மூலம் ரத்து செய்துள்ளனர்.
பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவற்றை பீதியில் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புங்கள். எல்பிஜி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் புக் செய்யும் தளங்களைப் பயன்படுத்தி, விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. IOCL, HPCL, BPCL ஆகிய நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் அடங்கிய மூவர் குழு மாநில அரசுகளுடன் இணைந்து வணிக எல்பிஜி விநியோகத்தை திட்டமிடுகிறது.
-
கோவையில் கியாஸ் சிலிண்டர் அடாவடி: மத்திய அரசு விதியை மீறி 36 நாட்களாக உயர்வு.. இல்லத்தரசிகள் ஷாக் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications