இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பண்டிகைகள், வார இறுதி என தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
இதை உணர்ந்து மக்கள் முன்கூட்டியே பணம் எடுக்க ஏஎடிஎம்களில் குவிந்து வருகின்றனர்.
ஆயுதபூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி என விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதன் காரணமாக இன்று முதல் வரும் அக்டோபர் 2ம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

வாடிக்கையாளர்கள் மின்கணக்கு மூலம் பணபரிமாற்றத்திற்கான NEFT வசதியைப் பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில் உடனடி பணப் பரிமாற்ற வசதியான IMPS செயல்பாட்டில் இருக்கும்.
மேலும் தொடர் விடுமுறை காரணமாக ஏ.டி.எம்.கள் முழுவதும் நேற்று 1 லட்சம் கோடி வரையிலான ரூபாய் நோட்டுகள் நிரப்பபட்டுள்ளன. ரொக்கத் தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொள்ள இந்த ஏற்பாட்டை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications