For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்பிஐ வங்கியுடன் 5 துணை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எஸ்பிஐ வங்கியுடன் 5 துணை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விரைவில் எஸ்பிஐ வங்கி அதன் இணை வங்கிகளுடன் இணைப்பது உறுதியாகியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் சவுராஷ்டிரா 2008ஆம் ஆண்டும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் 2010ஆம் ஆண்டும் இணைக்கப்பட்டன.

Cabinet approves merger of SBI, 5 associate banks

இதையடுத்து, தனது மற்ற துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகியவற்றையும் தன்னுடன் இணைக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி கடந்த ஆண்டு யோசனை தெரிவித்தது.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர்,ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவையாகும்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளையும் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு தற்போது 16 ஆயிரத்து 500 கிளைகள் உள்ளன. இவற்றில், 36 வெளிநாடுகளில் உள்ள 191 கிளைகளும் அடங்கும். இந்த இணைப்புக்கு பிறகு, அதன் சொத்து மதிப்பு ரூ.37 லட்சம் கோடியாகவும், கிளைகள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 500 ஆகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியாகவும் உயரும்.

தற்போது, உலகின் முன்னணி 50 வங்கிகள் பட்டியலில் எந்த இந்திய வங்கியும் இடம்பெறவில்லை. இனிமேல், இடம்பெற வாய்ப்புள்ளது.

English summary
State Bank of India, the country’s largest bank, has received Cabinet approval to merge its five subsidiaries, which will make the bank among top 50 banks in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X