மாசம் 1.7 லட்சம் சம்பளம், கையில் மிஞ்சுவது வெறும் ரூ2520! இளம் தலைமுறை குடும்பங்களின் மறைக்கப்பட்ட கண்ணீர் கதை

Subscribe to Oneindia Tamil

மென்பொருள் நிறுவனங்கள், கார்ப்பரேட் வேலைகள், கைநிறைய சம்பளம் எனப் பெருநகரங்களில் வாழும் இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கை வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் பகட்டாகவும் ஆடம்பரமாகவும் தெரியலாம்.

ஆனால், அந்தப் பளபளப்பான வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் கடுமையான கடன் சுமைகளும், மாதாந்திர ஈஎம்ஐ (EMI) நெருக்கடிகளும் பலரை மன ரீதியாக எந்த அளவுக்கு நிலைகுலைய வைக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது ஒரு கணவன்-மனைவியின் உண்மை கதை. இந்த கதை பல கோடி குடும்பங்களில் நிலவும் உண்மையான நிலை..

Young Couple EMI Debt Story 1 7 Lakh Salary Only 2520 Savings Urban Family Financial Struggle EMI Burden India Personal Loan Stress Middle Class Debt Trap Viral Reddit Financial Post Young Professionals Money Problems High EMI Low Savings India Financial Stress Young Couples 1 7 2520 EMI Debt Story Young Couple Finance Salary vs Savings Debt Trap India vs

ரெடிட் பதிவு

30 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு இளம் தம்பதியினர், தங்களுக்கு மாதம் ரூ.1,70,000 கூட்டு வருமானம் இருந்தபோதிலும், தங்களால் மாதம் வெறும் ரூ.2,520 மட்டுமே சேமிக்க முடிகிறது என்று ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் தங்களின் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளனர். இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் இவர்களின் இந்த நிதி நெருக்கடிப் பதிவு, இன்றைய இளம் தலைமுறையினரின் நிஜ வாழ்க்கைப் போராட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மாதம் ரூ.1.70 லட்சம் வருமானம்..

"மாதம் 1.7 லட்சம் சம்பாதிக்கிறோம், ஆனால் ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்தமாத சம்பளத்தை எதிர்பார்த்து வாழ்கிறோம்; மன ரீதியாக முற்றிலும் சோர்வடைந்துவிட்டோம், எங்களுக்கு ஏதேனும் வழி காட்டுங்கள்" என்ற தலைப்பில் அந்த தம்பதியினர் தங்களின் மாதாந்திர வரவு-செலவு கணக்குகளைப் பொதுவெளியில் உடைத்துள்ளனர்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் இந்த தம்பதியினர், தங்களின் எதிர்காலத் திட்டங்களுக்காக நிதியைக் கணக்கிடத் தொடங்கியபோது தான் தங்களுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளனர்.

கஜானாவைக் காலி செய்யும் ஈஎம்ஐ அரக்கன்

அந்த தம்பதியினர் பகிர்ந்துள்ள விபரங்களின்படி, கணவனின் மாதச் சம்பளம் ரூ.1,02,000 மற்றும் மனைவியின் சம்பளம் ரூ.68,000 ஆகும். ஒட்டுமொத்தமாக மாதத்திற்கு ரூ.1,70,000 வீட்டிற்குள் வந்தாலும், அதில் பாதிக்கும் மேலான தொகை அதாவது ரூ.85,980 வெறும் ஈஎம்ஐ (EMI) கட்டணங்களுக்கே சென்றுவிடுகிறது.

இதில் பெற்றோர்கள் சொந்த ஊரில் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கிய தொகைக்கு 18 சதவீதக் வட்டியில் கடனை அடைப்பதற்காக, இவர்களின் பெயரில் 13 சதவீத வட்டிக்கு வாங்கப்பட்ட ரூ.30 லட்சத்திற்கான தனிநபர் கடன் (Personal Loan) தவணை மட்டும் மாதத்திற்கு ரூ.70,154 ஆக உறிஞ்சுகிறது.

இது தவிர மனைவியின் கல்விக்கடன் ரூ.3,000, பைக்கிற்கான கடன் ரூ.12,000 மற்றும் மொபைல் போன் ஈஎம்ஐ ரூ.826 எனப் பட்டியல் நீள்கிறது.

வாடகை முதல் மளிகை வரை

கடன் ஒருபுறம் இருக்க, பெருநகரங்களில் வாழத் தேவையான நிலையான மாதாந்திரச் செலவுகள் (Fixed Expenses) மட்டும் ரூ.53,500 ஆகிறது. இதில் வீடு வாடகை மற்றும் பராமரிப்புக் கட்டணம் ரூ.25,000, மின்சாரம் மற்றும் பார்க்கிங் கட்டணம் ரூ.8,500, மளிகைப் பொருட்கள் ரூ.8,000, எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவு ரூ.5,000, மருத்துவச் செலவுகள் ரூ.5,000, இணையம் மற்றும் ஓடிடி (OTT) சந்தாக்கள் ரூ.2,000 எனப் பிரிகிறது.

இதுபோக, உடைகள் மற்றும் அழகுப் பராமரிப்பிற்கான தனிப்பட்ட செலவுகள் ரூ.10,000, வார இறுதி பொழுதுபோக்கு மற்றும் உணவகச் செலவுகள் ரூ.8,000, குடும்ப அவசர உதவிகள் ரூ.10,000 என செலவுகள் ரூ.28,000 ஆக உயர்ந்து நிற்கிறது.

ஒட்டுமொத்த வரவான ரூ.1,70,000-ல், கடன்கள் மற்றும் செலவுகள் போகக் கடைசியில் கையில் மிஞ்சுவது வெறும் ரூ.2,520 மட்டுமே.

'செலவுகள் எதிரியல்ல.. கடன்களே வில்லன்'

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்ததுடன், பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தப் பதிவிற்குப் பதிலளித்துள்ள நிதி ஆலோசகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும், "உங்களுடைய மாதாந்திரச் செலவுகள் பெரிய பிரச்சனையல்ல; உங்களை அச்சுறுத்தும் கடன்களே இங்கு உண்மையான வில்லன்" என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, இன்னும் நான்கு மாதங்களில் முடிவடைய உள்ள பைக்கிற்கான ஈஎம்ஐ ரூ.12,000 தொகையை, அது முடிந்தவுடன் அப்படியே தனிநபர் கடனை முன்கூட்டியே அடைப்பதற்கான (Pre-payment) கூடுதல் தொகையாகப் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கடன்களை முழுமையாகக் குறைக்கும் வரை குழந்தை மற்றும் வீடு போன்ற அடுத்தகட்ட வாழ்நாள் இலக்குகளைச் சற்றுத் தள்ளி வைப்பதே புத்திசாலித்தனம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய இளம் தலைமுறையினரின் நிலை

சென்னை, பெங்களூரு போன்ற ஐடி பெருநகரங்களுக்குக் குடிபெயரும் பல நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் இத்தகைய ஈஎம்ஐ வலைகளில் சிக்கித் தவிப்பது இன்று வாடிக்கையாகிவிட்டது.

வரவுக்கு மீறிய கடன்களும், ஆடம்பர வாழ்க்கை முறையும் எப்படி ஒரு உயர்தர சம்பளம் வாங்கும் குடும்பத்தைக் கூடச் சேமிப்பே இல்லாமல் நடுத்தெருவில் நிறுத்துகிறது என்பதற்கு இந்த நவீன கால தம்பதியின் கதையே மிகச் சிறந்த உதாரணம்.

ஆண்டுக்கு நல்ல வருமானம் ஈட்டிய போதிலும், தவறான கடன் தேர்வுகள் மற்றும் முறையற்ற நிதி மேலாண்மை காரணமாக இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான யோசனை மற்றவர்களின் வாழ்க்கையில் இருந்து தான் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+