ஆதார் எண்: ரேசன் கார்டு... பான்கார்டு, ஐடி ரிட்டன் மட்டுமல்ல லட்டுக்கும் இனி அவசியம்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கும் எதிலும் ஆதார் எண் என்றாகிவிட்டது. ரேசன்கார்டு, பான்கார்டுக்கு மட்டுமல்ல திருப்பதி வெங்கடசலபதி தரிசனத்திற்கே ஆதார் அவசியமாகி விட்டது. இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, எல்பிஜி, பான்கார்டு என வரிசையாக இணைக்கக் கூறி தினசரி அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. என்னதான் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தாலும் அவசியம் கருதி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அத்தியாவசிய சேவைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலிகள் அடையாளம் காணப்பட்டு, ஒழிக்கப்படுகின்றன.

சாதாரண மனிதனின் அடையாளம்

சாதாரண மனிதனின் அடையாளம்

வங்கிக்கணக்குகள், எல்பிஜி இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனாவின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில் உள்ளது.

மதிய உணவு திட்டம்

மதிய உணவு திட்டம்

சர்வ சிக்‌ஷ அபியான் திட்டத்தின் கீழ் மதிய மதிய உணவு உண்ணும் குழந்தைகள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக, ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது.

சமூக நீதி அமைச்சகம்

சமூக நீதி அமைச்சகம்

குழந்தைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் அங்கன் வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கான ஊக்கத் தொகைக்கு ஆதார் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக நீதி அமைச்சகத்தின் பலன்களை பெறுவதற்கும், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சமூக உதவி நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம்.

செல்போன் எண்

செல்போன் எண்

நாடு முழுவதும் உள்ள நடப்பு செல்போன் சந்தாதாரர்களிடம் அவர்களது ஆதார் எண்களை கேட்டுப்பெற வேண்டும், அதன் அடிப்படையில் அவர்களை சரிபார்க்க வேண்டும் என்று தொலைதொடர்புத்துறை, செல்போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண் பான் கார்டு

ஆதார் எண் பான் கார்டு

வருமான வரி செலுத்துவதற்கும், பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் அவசியம் என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும், வருமான வரி செலுத்துவோர் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி தேதி ஜூன் 30 என்றும் அறிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், பான் கார்டு செல்லும் என்றும், பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் அல்ல என்றும் தங்கள் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் விவகாரத்தில், அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் வரை இந்த தடை தொடரும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பான் கணக்கு எண்

பான் கணக்கு எண்

அதேநேரத்தில், ஆதார் எண் உள்ளவர்கள், பான்கார்டு எண்ணை இணைத்து கொள்ள தடையில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய நேரடி வரி வாரியம், ஆதார் எண் இல்லாத நிரந்தர கணக்கு எண்கள் (பான்) ரத்து செய்யப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட மாட்டாது

ரத்து செய்யப்பட மாட்டாது

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆதார் அட்டை இல்லாதவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஆகியோருக்கு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய பான் எண்கள் போதுமானது என்று பகுதியளவில் சலுகை வழங்கியதையடுத்து, ஆதார் அட்டை இல்லாத பான் எண்கள் ரத்து செய்யப்படமாட்டாது என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய அவசியம்

வருமான வரி தாக்கல் செய்ய அவசியம்

ஆனால் ஆதார் எண் இல்லாதவர்கள் வெறும் பான் எண்ணுடன் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தடையில்லை என்று ஆதார் இல்லாதவர்களுக்கும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் தற்காலிக விலக்கு அளித்துள்ளது. அதே நேரத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என்றும் கூறியுள்ளது மத்திய நேரடி வரி வாரியம். புதிய பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் எண் அவசியம் என்று கூறியுள்ளது.

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்

மத்திய அரசு ஆதார் எண்ணை ஒரு குடிமகனின் அடையாளமாக கொண்டு வரத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மனி தனுக்குமான அதிகாரம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் விரைவில் ஆதார் முறைக்கு மாற வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Central Board of Direct Taxes (CBDT) said on Sunday that Aadhaar will be mandatory for filing Income Tax returns+ and applying for Permanent Account Number (PAN) from July 1, 2017.
Please Wait while comments are loading...