கோல்டு மார்க்கெட்டில் 1 சவரன் ரூ.1.5 லட்சம் வரப்போகுதாமே? ஆபரணங்களின் விலை இப்பவே கண்ணை கட்டுதே
சென்னை: உலக பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலில் நிலவும் பெரும் நிச்சயமற்ற தன்மை, தங்கத்தின் விலையை வரலாறு காணாத உச்சத்துக்கு இன்று கொண்டு சென்றுள்ளது... சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலரைத் தாண்டி, தற்போது 5,092 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் நேரடி தாக்கமாக இந்தியாவிலும் தங்கம் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் விளைவு என்னாகும்? நிபுணர்கள் சொல்வதென்ன?
கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் தங்கம் 64 சதவீதம் உயர்ந்துள்ளது. இது 1979க்கு பிறகு காணப்படும் மிகப்பெரிய ஆண்டு வளர்ச்சியாகும்.. நடப்பு 2026ம் ஆண்டின் முதல் சில வாரங்களிலேயே தங்கம் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

1.50 லட்சம் சவரன்
லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் கணிப்பின் படி, இந்த ஆண்டில் தங்கம் ஒரு அவுன்ஸ் 7,150 டாலர் வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது... அதேபோல், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தனது இலக்கை 5,400 டாலராக உயர்த்தியுள்ளது. சில தனியார் ஆய்வாளர்கள், விலை 6,000 - 6,400 டாலர் வரை கூட செல்லலாம் என எதிர்பார்க்கிறார்கள்..
இந்த அதீத உயர்வுக்கு முக்கிய காரணமாக புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தக வரி தொடர்பான குழப்பங்கள், அமெரிக்க அரசியல் மாற்றங்கள் போன்றவை சொல்லப்படுகின்றன. மேலும், டாலர் சார்பை குறைப்பதற்காக சீனா, போலந்து உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகள் மாதத்திற்கு சராசரியாக 60 மெட்ரிக் டன் தங்கத்தை வாங்கி வருகின்றன.. சீனா தொடர்ந்து 14 மாதங்களாக தங்க கையிருப்பை அதிகரித்து வருகிறது.
முதலீடு தேவை அதிகம்
இன்னொரு முக்கிய காரணம் முதலீட்டு தேவையாகும்.. அதாவது உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி, 2025ல் மட்டும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ETF திட்டங்களில் 801 மெட்ரிக் டன் அதாவது சுமார் 8.1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நகை அல்லது தங்க நாணயங்களை வாங்குதைவிட, டிஜிட்டல் கோல்டு மற்றும் ETF வழியாக முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகிறார்களாம்..
இப்படிப்பட்ட சூழலில்தான் சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ.16,391 ஆகவும், 22 காரட் ஆபரண தங்கம் ரூ.15,025 ஆகவும் இன்று விலை உள்ளது. வெள்ளி ஒரு கிலோ ரூ.3.75 லட்சம் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.18,500 - 19,000 வரை விலை உயரலாம் என்று நிபுணர்கள் கணித்து சொல்கிறார்கள்.. அதாவது, ஒரு பவுன் தங்கம் ரூ.1.5 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தை எட்டும் வாய்ப்பு உள்ளதாக இப்போதே கிலியை கிளப்புகிறார்கள்..
ஒரு பவுன் தங்கம் ரூ.1.5 லட்சம் எட்டினால் என்ன ஆகும்?
ஒருவேளை ஒரு சவரன் தங்கம் ஒன்றரை லட்சத்துக்கு போனால், ஆபரண வாங்குதல் குறையும், முதலீட்டு நோக்கில் வாங்குபவர்கள் அதிகரிப்பார்கள்.. திருமணங்கள் மற்றும் விழாக்களில் தங்க பயன்பாடு குறைந்து, வெள்ளி அல்லது லைட் வெயிட் ஆபரணங்கள் அதிகரிக்கலாம்., பழைய தங்கத்தை விற்று லாபம் பார்க்கும் போக்கு அதிகரிக்கும்.. இதனால் நகை தொழில் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தற்காலிக மந்தம் ஏற்படலாம்.
அதனால்தான் நிபுணர்கள் இப்போதே அலர்ட் செய்வது என்னவென்றால், தங்கம் விலை உயர்வை பார்த்து முழு முதலீட்டையும் தங்கத்தில் போடுவது ஆபத்தானது என்கிறார்கள்.
ஒரு நபரின் முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கம் மற்றும் வெள்ளி சேர்த்து அதிகபட்சம் 20 சதவீதம் போதுமானது.... உலகளாவிய பொருளாதார குழப்பம் நீடிக்கும் வரை தங்கத்தின் மீது உள்ள முதலீட்டு ஈர்ப்பு தொடரும். அதே நேரத்தில், சமநிலையுடன் முதலீடு செய்வதே சிறந்த வழி என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications