Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் தங்க நகையை பில் போட போனபோது இறங்கிய இடி! பெரிய தொகை நஷ்டம்.. கதறும் மக்கள்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், நகை வாங்கச் செல்வோருக்கு ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அதிர்ச்சியே காத்திருக்கிறது. இன்று அதைவிட மேலே போய் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காலையில் நகை வாங்கச் சென்றோர், நகை மாடலை தேர்வு செய்து பில் போட வருவதற்குள் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் தங்கம் எப்போதுமே முக்கியமான முதலீடாக இருந்துள்ளது. கலாச்சார ரீதியாகவும் தங்கத்திற்கு முக்கிய இடம் இருப்பதால் இந்தியர்கள் எப்போதுமே தங்கத்தை வாங்கியே வந்துள்ளனர். இந்தியாவில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை சீராக உயர்ந்து வந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.

Gold Price Shock Today Intraday Surge Hits Buyers Hard What is the real reason for sudden rally

தங்கம்

கடந்த 2000 முதல் 2019, அதாவது கொரோனாவுக்கு முன்பு வரை தங்கம் விலை இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 11.6% உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு தங்கம் விலையேற்றம் சற்ற வேகமெடுத்தாலும் கூட 2024 வரை ஆண்டுக்குச் சராசரியாக 12.1% மட்டுமே உயர்ந்தது. ஆனால், டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற உடன் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. கடந்த 2025 முதல் இப்போது வரை மட்டும் தங்கம் விலை கிட்டத்தட்ட 94% உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் விலை இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இதனால் தங்கத்தை வாங்க நினைப்போர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய் இருக்கிறார்கள்.

விலையை முடிவு செய்வது யார்

பொதுவாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலையைப் பொறுத்தே இந்தியாவிலும் தங்கம் விலை இருக்கும். லண்டனில் உள்ள தங்க மார்கெட் தான் உலகிற்கே முன்னோடி. அங்கு ஒரு நாளுக்கு இரண்டு முறை தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில், அதற்கேற்ப இந்தியாவிலும் தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும். இந்தியாவின் தங்கம் விலையை மும்பையில் உள்ள சாவேரி பஜார் தான் நிர்ணயம் செய்கிறது.

இரண்டு முறை

முன்பெல்லாம் தினசரி ஒரு முறை மட்டுமே தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல நாட்கள் இரண்டு முறை மாற்றி அமைக்கப்படும் அளவுக்குக் கூட தங்கம் விலை உயர்ந்திருந்தது. இன்று அதையும் விட மோசமாக 3 மணி நேரத்திற்குள் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் 2800 ரூபாய் உயர்ந்த நிலையில், பகலில் மீண்டும் ரூ.1320 உயர்ந்தது. அதாவது தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,15,320க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,415க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஏற்றமே இதற்குக் காரணமாகும். காலை 9 மணியளவில் 4800 டாலரை கடந்த தங்கம், வெறும் 3 மணி நேரத்தில் 4880 டாலர் வரை உயர்ந்தது. கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் மிரட்டல், அமெரிக்க- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போர் அச்சம் ஆகியவை பிரதானக் காரணமாக இருக்கிறது. மேலும், டாலர் மதிப்பும் சரியும் நிலையில், அதுவும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது.

கதறல்

இதன் காரணமாகவே இந்தியாவில் 3 மணி நேர இடைவெளியில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது. தங்கம் வாங்க இன்று காலை கடைக்குச் சென்றவர்களுக்கு இதனால் பெரிய அதிர்ச்சி தான். எப்போதும் கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தங்கம் வாங்கச் செல்லும்போது, பொறுமையாக 3, 4 மணி நேரம் உட்கார்ந்து பார்த்துத் தான் தங்கம் வாங்குவார்கள்.

இன்று காலை ஒரே ரேட் மதியம் ஒரு ரேட் என மாறியிருக்கிறது. பொதுவாக நகைக் கடைகளில் ரியல் டைம் மார்கெட் விலையை வைத்தே பில் போடுவார்கள். இதனால் நகையைத் தேர்வு செய்து பில் போட காத்திருந்தோருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். கொஞ்ச நேரம் முன்பு பில் போட்டு இருந்தால் கூட பல ஆயிரத்தைச் சேமித்து இருக்கலாம் எனப் புலம்பித் தள்ளுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+