கிராம் தங்கம் வாங்கும் பொன்னான வாய்ப்பு! 2026 விலை கணிப்பு வெளியீடு.. குட் நியூஸ் வரும்போல
சென்னை: உலக தங்கச் சந்தை தொடர்ந்து சலசலப்பை உருவாக்கி கொண்டிருக்கும் நிலையில், 2026ம் ஆண்டின் தங்க விலை எவ்வாறு இருக்கும் என்பதைக் குறித்து முன்னணி சர்வதேச வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களது புதிய மதிப்பீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.. ஏற்கனவே சில வங்கிகள் தங்கள் கணிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், இப்போது புதிதாக மேலும் 3 வங்கிகள் தங்களது மதிப்பீடுகளை வழங்கி உள்ளன. இந்த கணிப்புகள், முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே நிலையில்லாமல் இருந்து வருகிறது... இதனால் முதலீட்டாளர்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்க முடிவதில்லை.. தங்கம், பங்குச்சந்தை என்று அவர்களின் கவனம் மாறி மாறி குவிந்து வருகிறது..

இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.96,560க்கு விற்கப்படுகிறது.. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2026-ல் தங்கத்தின் விலை
அதுமட்டுமல்ல, இப்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4187 அமெரிக்க டாலர் ஆக உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் தங்கம் சுமார் 60% உயர்வு கண்டுள்ளது... அப்படியிருக்கும்போது வரப்போகும் 2026-ல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? என்பது குறித்து 3 முக்கிய நிதி நிறுவனங்கள் புதிய கணிப்புகளை வெளியிட்டிருக்கின்றன.
Bank of America வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026ம் வருடம், ஒரு அவுன்ஸ் தங்கம் 5000 டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைய விலையிலிருந்து சுமார் 19% உயர்வு நிகழும் வாய்ப்பு உள்ளதாகவும், டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கை மாற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையும் தங்க விலையை மேலும் தூண்டும் என்றும் Bank of America அடித்து கூறுகிறது.
வட்டி குறையுமா?
அதேபோல Goldman Sachs நிறுவனமும் இதை பற்றி கணித்து சொல்லும்போது, 2026ல் தங்கம் 4900 டாலர் வரை உயரக்கூடும் என்கிறது..
உலகின் பல மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை அதிக அளவில் குவித்து வருவது, வட்டி விகிதங்கள் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு போன்றவை, தங்கத்தின் விலைக்கு ஆதரவாக இருப்பதாகவும் அந்நிறுவனம் சொல்கிறது.. அமெரிக்க மத்திய வங்கி 2025ல் 3 முறை வட்டி குறைக்கக்கூடும் என்ற மதிப்பீடும் தங்க சந்தையை உறுதியாக்கும் என்பது Goldman Sachs சொல்லும் கணிப்பாகும்.
ஆனால், HSBC வேறுவிதமான கணிப்பை வெளியிட்டுள்ளது.. அதாவது, தங்க விலை அதிகமான ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் 4400 டாலர் நிலையை சுற்றி இயங்கும் என்று கூறுகிறது.. இப்போதைய விலையிலிருந்து அதிகபட்சம் 5% உயர்வே உள்ளதாகவும், உலக வர்த்தக மோதல்கள் குறைந்திருப்பதும், புவிசார் பதட்டங்கள் தணிந்திருப்பதும் தங்க விலையை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கக்கூடும் என்றும் HSBC நிறுவனம் தன் கணிப்பில் தெரிவித்துள்ளது.
தங்க சந்தையில் திசை மாற்றம்
ஏற்கனவே Citi Bank இப்படித்தான் தன்னுடைய கணிப்பையும் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.. அதில், 2026 முதல் 3 மாதங்களில் தங்கம் ஒரு அவுன்ஸிற்கு 3,840 டாலர் ஆக உயரலாம் என்று கூறியிருந்தது..
அதேபோல 2026 முதல் காலாண்டில் தங்கம் விலை 4,440 டாலர் வரை போகலாம் என்றும் வருட கடைசியில் அது 4,900 டாலர் வரை ஏறக்கூடும் என்றும் Goldman Sachs வங்கி உள்ளிட்டவை மதிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
பெரும்பாலான முக்கிய நிறுவனங்களின் கணிப்புகள், 2026 ம் ஆண்டு தங்கம் முதலீட்டாளர்களுக்கு வளமான வருடமாக இருக்கும் என்று கூறும் அதேசமயம், உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் விலையின் உச்சத்தை நிர்ணயிக்கும் என்பதுதான், மேற்கண்ட வங்கிகளின் மதிப்பீடுகள் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications