நாளை ’இந்த’ வங்கியின் யுபிஐ செயல்படாது! போன் பே, ஜி பே பண்ணவும் முடியாது! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: நவம்பர் 5 ( நாளை) மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என எச்டிஎப்சி வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் யுபிஐ உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் தற்போது வங்கி பணிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று நிறைய படிவங்களை பூர்த்தி செய்து கால் கடுக்க காத்திருந்து பணம் அனுப்ப வேண்டும்.

மேலும் அவருக்கு பணம் சென்று சேரவும் குறிப்பிட்ட மணி நேரம் ஆகும். ஆனால் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சில நிமிடங்களில் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
குறிப்பாக டிஜிட்டல் முறையில் இந்தியாவில் உடனுக்குடன் பணத்தை அனுப்ப யுபிஐ பேமென்ட் வசதி உள்ளது. இதன் மூலம் வணிகர்கள் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கூகுள் ப்ளே, போன் பே, அமேசான், பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு செயல்கள் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன. இதன் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் பல நாடுகளும் யூபியை சேவையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் வங்கிகளும் மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய சூழ்நிலை உங்கள் வங்கி கணக்கை யுபிஐ செயலிகளுடன் இணைத்து விட்டால் உடனுக்குடன் பணத்தை பெறவும் அனுப்பவும் முடியும். இந்த நிலையில் பிரபல வங்கியான எச்டிஎப்சி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த வங்கியின் யுபிஐ சேவை இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி யுபிஐ மற்றும் பிற பரிவர்த்தனைகள் செயல்படாது என கூறியுள்ளது. அதன்படி நவம்பர் 5ஆம் தேதியான நாளை காலை 12 மணி முதல் 2 மணி வரை 2 மணி நேரத்திற்கும், நவம்பர் 23ஆம் தேதி காலை 12 மணி முதல் 3 மணி வரை மூன்று மணி நேரமும் யுபிஐ சேவை செயல்படாது என கூறப்பட்டுள்ளது.
மேலும் எச்டிஎப்சி வங்கியின் சேவிங்ஸ் மற்றும் கரண்ட் அக்கவுண்ட் கணக்குகளில் யுபிஐ பரிவர்த்தனை, ரூபே கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. மேலும் எச்டிஎப்சி வங்கியின் மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் ஆப் பேபயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது. மேலும் எச்டிஎப்சி வங்கி மூலம் வணிகர்களும் இந்த நேரத்தில் யுபிஐ பலிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. அதே நேரத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் யுபிஐ சேவைகள் உடனடியாக கிடைக்கும் எனவும், அதற்கேற்ற முன்னேற்பாடுகளை பொதுமக்களும் வணிகர்களும் வாடிக்கையாளர்களும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications