ஜப்பான் எடுத்த முடிவால் உலக நாடுகள் ஷாக்.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி!

Subscribe to Oneindia Tamil

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியின் அமைச்சரவை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அந்நாட்டின் அரசியலமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் போர் ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை முழுமையாக நீக்க முடிவு செய்துள்ளது. இனி போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படும்.

பிரதமர் சனே தகைச்சி தனது சமூக ஊடக பதிவில், "ஒரு நாடு மட்டும் தனது அமைதி மற்றும் பாதுகாப்பை தனியாக உறுதி செய்ய முடியாது" என்று கூறியுள்ளார். அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்ச சூழலில், கூட்டணி நாடுகள் ஒன்றுக்கொன்று பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சனே தகைச்சி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்ரு ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு துறை செலவை அதிகரிக்க உள்ளதாக அறிவித்த போது, சீனா கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது ஜப்பான் தனது ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய முடிவை எடுத்துள்ளதை உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்க்கின்றது.

japan weapons export Japan Lifts Arms Export Ban Sanae Takaichi Defense Policy Japan Pacifist Constitution Change Japan Weapons Export 2026 Article 9 Japan Shift 2026 Article 9 japan lifts lethal weapons export ban sanae takaichi cabinet decision japan pacifist constitution change japan arms export policy shift japan fighter jets export japan warships missiles export article 9 japan reinterpretation japan defense spending increase japan australia warship deal japan israel ukraine support japan self defense forces role tokyo weapons export policy 2026 japan ends post war arms ban sanae takaichi statement on defense japan eligible countries for arms purchase Article 9 2026

ஏன் இந்த மாற்றம்?

ஜப்பான் சமீப காலமாக தனது பாதுகாப்பு செலவை அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர்களில் கூட்டாளி நாடுகளுக்கு ஆதரவு அளிக்கவும், பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது ஜப்பானின் அமைதிவாத அரசியலமைப்பில் (Article 9) 2014-ல் ஏற்பட்ட விளக்க மாற்றத்தின் தொடர்ச்சியாகும். அப்போது பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் ஜப்பான் தனது சுயபாதுகாப்புப் படைகளை (Self-Defense Forces) சர்வதேச அமைதி நடவடிக்கைகளில் ஜப்பான் படைகளை அதிகமாக பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதை தொடந்து தற்போது ஜப்பான் ஆயுத ஏற்றுமதிக்கான கதவுகளை திறந்துள்ளது.

எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள்

இந்த மாற்றத்துக்கு எதிராக ஜப்பானில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. "போர் வேண்டாம்" என்று ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜப்பான் அரசியலமைப்பின் Article 9-ஐ பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த கொள்கை மாற்றம் உலகில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர்.

தகுதியான நாடுகள்

புதிய கொள்கையின்படி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட குறைந்தது 17 நாடுகள் ஜப்பான் தயாரிக்கும் ஆயுதங்களை வாங்க தகுதியுடையவையாக உள்ளன. இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் இந்த பட்டியல் விரிவடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் 7.15 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதேபோல் தற்போது போர் நடக்கும் நாடுகளுக்கு ஆயுதங்களை ஜப்பான் விற்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முக்கிய திருப்பம்

ஜப்பான் பொருளாதார வளர்ச்சி ஒருபக்கம் மந்தமாகியிருக்கும் வேளையில், அந்நாட்டு அதிகப்படியான முதியோர்கள் கொண்டு மக்கள் தொகையிலும், வர்த்தக துறையிலும் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஆயுத உற்பத்தியிலும், ஆயுத ஏற்றுமதியிலும் ஜப்பான் முழு நேரமாக இறங்கியிருப்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

இதேவேளையில் சீனா தைவான் மீது தாக்குதல் நடுத்துவதாகவும், கைப்பற்றுவதாகவும் அறிவித்த பின்பு ஜப்பான் தனது பாதுக்காப்பு துறையை மெல்ல மெல்ல மேம்படுத்த துவங்கி தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+