NPS திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை வித்டிரா செய்ய போறீங்களா..? முதல்ல இதை படிங்க - புது ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு ஓய்வூதிய திட்டம். இத்திட்டத்தின் அடிப்படையே நீண்ட காலம் திட்டமிட்டு முதலீடு செய்து, ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை உருவாக்க உதவுவது தான். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது பங்குச்சந்தை அடிப்படையிலான வருமானம் மற்றும் வரி சேமிப்பு நன்மைகள் ஆகிய இரண்டையும் இணைக்கிறது. அதனால், நீண்ட கால ஓய்வு திட்டமிடலில் NPS ஒரு நம்பகமான திட்டமாக மாறியுள்ளது.

இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் பலர் இத்திட்டத்தில் இருந்து பணத்தை வெளியேற்ற திட்டமிடுவோருக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) சந்தாதாரர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை அளிக்கும் வகையில் பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (PFRDA) தற்போது நடைமுறை செய்துள்ளது.

இந்த புதிய விதிகள் எல்லோருக்கும் எளிதாக புரியும் வகையில், யார் எவ்வளவு தொகை எடுக்க முடியும், எந்த விதிகள் பொருந்தும் என்பதை இங்கே முழுமையாக பார்ப்போம்.

NPS investment NPS 2026 NPS PFRDA NPS NPS NPS NPS Withdrawal Rules 2026 PFRDA NPS Changes NPS Lump Sum Withdrawal NPS Premature Exit Corporate NPS Rules NPS withdrawal rules 2026 NPS new rules PFRDA NPS premature withdrawal 2026 NPS lump sum withdrawal government NPS corporate sector withdrawal NPS exit age 85 NPS annuity rules 2026 NPS corpus based withdrawal NPS 80 lump sum NPS 5 lakh full withdrawal NPS vesting period change NPS lock in removed NPS normal exit rules PFRDA revised norms NPS accumulated pension wealth withdrawal NPS 2026 NPS PFRDA NPS 2026 NPS NPS NPS 85 NPS 2026 NPS NPS 80 NPS 5 NPS NPS - NPS PFRDA NPS

பணி ஓய்வுக்குப் பின் NPS வித்டிரா விதிகள்

அரசு ஊழியர்களுக்கு NPS வித்டிரா செய்வதற்கான வயது வரம்பு 75 லிருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 85 வயது வரை முதலீடு செய்து கொள்ளலாம் என்றாலும், தேவைப்பட்டால் அதற்கு முன்பே இத்திட்டத்தை விட்டு வெளியேறி பணம் எடுக்கலாம்.

வெளியேறும் போது மொத்த ஓய்வூதிய தொகையில் 60 சதவீதத்தை ஒரே தொகையாகவோ அல்லது படிப்படியாகவோ பெறலாம். மீதிமுள்ள 40 சதவீதத்தை ஆண்டு வருமானம் தரும் அன்யூட்டியில் முதலீடு செய்ய வேண்டும். இந்த விதி முன்பு இருந்ததைப் போலவே தொடர்கிறது.

தனியார் துறை ஊழியர்கள்

தனியார் துறை ஊழியர்களுக்கு முன்பு இருந்த ஐந்தாண்டு கால கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. முன்பு 60 வயது வரை இருந்த வெஸ்டிங் காலம் இப்போது 15 ஆண்டுகள் அல்லது 60 வயது ஆகியவற்றில் எது முதலில் வருகிறதோ அதை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

என்பிஎஸ் திட்டத்தில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தால் மொத்த தொகையில் 80 சதவீதம் வரை ஒரே தொகையாக பெறலாம். குறைந்தது 20 சதவீதத்தை அன்யூட்டியில் முதலீடு செய்ய வேண்டும். இது முன்பு இருந்த 60 சதவீத உச்சவரம்பை தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தொகை அடிப்படையிலான NPS வித்டிரா

ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதிய தொகை எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் முழுத் தொகையையும் ஒரே தொகையாக எடுத்துக் கொள்ளலாம். எட்டு லட்சம் முதல் பன்னிரண்டு லட்சம் ரூபாய் வரையிலான தொகை இருந்தால் ஆறு லட்சம் ரூபாய் வரை ஒரே தொகையாகவும், மீதியை குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு படிப்படியாகவோ அல்லது அன்யூட்டியாகவோ பெறும் வகையில் தேர்வு செய்யலாம்.

12 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தனியார் துறைக்கான பொதுவான 80:20 விதி பொருந்தும்.

முன்கூட்டியே NPS வெளியேற்ற விதிகள்

அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வெளியேறினால் மொத்த ஓய்வூதிய தொகையில் 80 சதவீதத்தை அன்யூட்டியில் முதலீடு செய்ய வேண்டும். மீதி 20 சதவீதத்தை ஒரே தொகையாகவோ படிப்படியாகவோ பெறலாம்.

தனியார் துறை ஊழியர்களுக்கு மொத்த தொகையில் 20 சதவீதம் வரை ஒரே தொகையாகவும், குறைந்தது 80 சதவீதத்தை அன்யூட்டியாகவும் பயன்படுத்த வேண்டும். இந்த இரு விதிகளும் முன்பு இருந்ததைப் போலவே தொடர்கின்றன.

சிறிய தொகைக்கான சிறப்பு வசதி

அரசு மற்றும் தனியார் துறை இரண்டுக்கும் பொதுவாக, மொத்த ஓய்வூதிய தொகை ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் முன்கூட்டியே வெளியேற்றத்திலும் முழுத் தொகையையும் ஒரே தொகையாக பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் NPS சந்தாதாரர்களின் ஓய்வூதிய திட்டத்தை மேலும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+