ஒரே ஒரு முதலீடு.. 23.000% லாபத்தை அள்ளிய ரத்தன் டாடா.. நாடே வியக்குது.. எப்படினு பாருங்க!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா ஒரே ஒரு முதலீடு மூலம் 23,000% லாபத்தை அள்ளி இருக்கிறாராம். அதுவும் வெறும் எட்டு ஆண்டுகளில் இந்த பெரிய லாபத்தை அள்ளி இருக்கிறார். இதை அவர் எப்படிச் செய்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொழில் குழுமம் என்றால் அது டாடா சன்ஸ் தான். சம காலத்திற்கு ஏற்ற வகையில் டாடா சன்ஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் ரத்தன் டாடாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.

ratan tata personal finance

பெரிய பெரிய நிறுவனங்களுடன் மட்டும் டீல் போடாமல், சிறு நிறுவனங்களையும் கூட வளர்த்து விடுவதே ரத்தன் டாடாவின் ஸ்டைல். இன்று இந்தியாவில் மிக முக்கிய ஐடி நிறுவனமாக உள்ள இன்போசிஸ் உருவாக டாடாவின் உதவி முக்கியமானது.

ஸ்டார்ட் அப்: இப்போதும் கூட அவர் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அடையாளம் கண்டு தொடர்ந்து முதலீடுகளைச் செய்து வருகிறார். அப்படி தான் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு அப்ஸ்டாக்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். 2016இல் அவர் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தில் சுமார் 1.33% பங்குகளை வாங்கி இருந்தார். இந்த முதலீட்டில் தான் அவருக்கு 23000% லாபம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நிறுவனம்: அப்ஸ்டாக்ஸ் என்பது ஒரு ஆன்லைன் டிரேடிங் நிறுவனமாகும். 2016 காலகட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஈஸியான காரியமாக இல்லை. ஷேர் மார்க்கெட் புரோக்கர் ஆபீசுக்கு நேரில் சென்று, பல ஆவணங்களைக் கொடுத்து, விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தே முதலீடு செய்ய முடியும். அதற்கும் கணிசமான தொகையை கமிஷனாக தர வேண்டி இருந்தது. ஆனால், இதை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றி கமிஷனையும் குறைத்தது அப்ஸ்டாக்ஸ் நிறுவனம். இதனால் மக்கள் எளிதாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இது எவ்வளவு பெரிய நிறுவனமாக மாறும் என்பதை விதையிலேயே கண்டுகொண்ட ரத்தன் டாடா அப்போது முதலீடு செய்திருந்தார். இதில் தான் பெரிய லாபத்தை டாடா அள்ளியுள்ளார். டாடா தன்னிடம் உள்ள 5% பங்குகளை அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்திற்குத் திரும்பக் கொடுத்துள்ளார். இந்த ஐந்து சதவிகிதத்தைக் கொடுத்ததிலேயே அவரது தனது முதலீட்டில் 10 மடங்கு லாபத்தைப் பெற்றுவிட்டாராம்.. தன்னிடம் உள்ள 95% பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்க டாடா முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23,000% லாபம்: இது தொடர்பாக அப்ஸ்டாக்ஸ் தரப்பில் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தின் நிகர மதிப்பு இப்போது $3.5 பில்லியனாக உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் டாடா 2016இல் முதலீட்டில் அவருக்கு 23,000% வருமானம் கிடைத்துள்ளது. அனைவரும் முதலீடு செய்யும் வகையில் சிஸ்டத்தை மாற்ற நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு இதுவே சான்று" என்று குறிப்பிடப்பட்டுள்ளதது.

அதுதான் ரத்தன் டாடா! கண்ணீர் விட்ட சக பயணி.. ஐடியாவை கேட்டு ஸ்டார்ட்அப்பில் கோடிகளில் முதலீடு


டாடாவின் முதலீட்டுக்கு நன்றி சொன்ன அப்ஸ்டாக்ஸ் இணை நிறுவனர் கவிதா சுப்ரமணியன், "எங்கள் பயணத்தில் டாடாவின் பங்கு முக்கியமானது. எங்கள் விஷன் மீது தொடக்கத்திலேயே அவர் நம்பிக்கை வைத்தார். டாடாவின் முதலீடு பலருக்கும் நம்பிக்கையைக் கொடுத்தது. எங்கள் சவால்களை அது எளிமையாக்கியது" என்று அவர் தெரிவித்தார்.

எப்படி சாத்தியம்: பொதுவாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குத் தொடக்கக் காலத்தில் முதலீடு கிடைப்பதில் சிரமம் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் தான் இதுபோன்ற பெரிய தொழிலதிபர்கள் முதலீடு செய்வார்கள். நிறுவனம் நன்கு வளர்ந்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும். அப்படி தான் டாடாவுக்கு இதில் லாபம் கிடைத்துள்ளது. அதேநேரம் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்யும் போது 10 நிறுவனங்களில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் ஒரு முதலீட்டு ஆலோசனையாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை பெறவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+