வங்கி சேமிப்பு கணக்குகளில் கேட்பாற்று கிடக்கும் ரூ.3,652 கோடி
மும்பை: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் கேட்பாரற்று ரூ.3,652 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.3,652.3 கோடி ரூபாய் கேட்பாரற்று பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது. அடுத்த இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை வங்கிக் கணக்கை பயன்படுத்தவில்லை என்றால், அது பயன்பாடு அற்ற கணக்காக கொள்ளப்படும். மேலும் 8 ஆண்டுகள் வரை, வங்கிக் கணக்கை எந்த வகையிலும் பயன்படுத்தாமல் இருந்தால், அது கேட்பாரற்ற கணக்குக்கு மாற்றப்படும்.
பல காலம் கழித்து, கணக்குக்கு உரியவர் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து தனது கணக்கில் இருந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த கேட்பாரற்ற தொகையில், பெருமளவு பல்வேறு ஊரகப் பகுதிகளில் ரூ.1000ம் செலுத்தி வங்கிக் கணக்கை துவக்கிவிட்டு, பிறகு அதனை பயன்படுத்தாமல் இருப்பதாகவே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications