இவ்ளோதாங்க ஜிஎஸ்டி... வதந்திகளை நம்பி குழம்பாதீங்க - ஹஸ்முக் ஆதியா

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலாகியுள்ளது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஜி.எஸ்.டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்று வருமான வரித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகாளினால் மக்களிடையே குழப்பங்கள் நிலவி வருகின்றன.

வதந்திகளுக்கும் கட்டுக்கதைகளுக்கும் வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா விளக்கமளித்துள்ளார்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஜிஎஸ்டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். 39,000 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஸ்டி யில் குறிப்பிடப்படவில்லை. சிறு குறு வணிகள் ஏற்கனவே பதிவு செய்துள்ள வரியை செலுத்தினால் போதும்.

விலையை பதிவிட வேண்டும்

விலையை பதிவிட வேண்டும்

ரூ.75 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிக வருவாய் கொண்ட தொழில்கள் பில் அவசியம் கொடுக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டிக்கு முன், ஜிஎஸ்டிக்கு பின் உள்ள விலையை தெளிவாக பொருட்களில் பதிவிட வேண்டும். பொருட்கள் மீதான எம்.ஆர்.பி. விலையை செப்டம்பர் 30க்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பயப்பட வேண்டாம்

பயப்பட வேண்டாம்

ஒரு பொருட்களின் விலையை 3 மாதங்களுக்கு தெளிவாக ஸ்டிக்கர்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ஜி.எஸ்.டி குறித்த தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஜி.எஸ்.டி தொடர்பாக யாரும் பயப்படத் தேவையில்லை.

மென்பொருட்கள்

மென்பொருட்கள்

இதற்குப் பெரிய வருமான வரி உள்கட்டமைப்புகள் தேவையில்லை. வணிக நிறுவனங்களுக்கும்கூட பெரிய விலையுயர்ந்த மென்பொருள்கள் தேவையில்லை. அனைத்து மென்பொருள்களையும் நாங்களே வழங்குகிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் தங்களின் வருமானத்தைத் தாக்கல் செய்தால் போதும் என வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா விளக்கமளித்துள்ளார்.

ஹஸ்முக் ஆதியா விளக்கம்

ஜிஎஸ்டி குறித்து நிலவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள ஹஸ்முக் ஆதியா, தன் டுவிட்டர் பக்கத்தில் வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

வதந்தி 1: அனைத்து விலைப் பட்டியல்களையும் கணினி மற்றும் ஆன்லைன் மூலம் மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடியும்.

விளக்கம் : கைகளால் எழுதும் முறையிலும் விலைப் பட்டியல்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

இணையம் தேவையா?

இணையம் தேவையா?

வதந்தி 2: ஜி.எஸ்.டி முறைக்குப் பிறகு, இணைய வசதியின்றி எந்தத் தொழிலையும் செய்ய முடியாது.

விளக்கம் : வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டுமே இணையம் தேவையே தவிர, தொழில் செய்ய இணையம் அவசியம் அல்ல.

ஜிஎஸ்டி அடையாள எண்

ஜிஎஸ்டி அடையாள எண்

வதந்தி 3: தற்காலிக ஜி.எஸ்.டி அடையாள எண் மட்டும் போதாது, தொழில் செய்ய இறுதி செய்யப்பட்ட ஜி.எஸ்.டி அடையாள எண் வேண்டும்.

விளக்கம் : தற்காலிக ஜி.எஸ்.டி அடையாள எண் தான் இறுதி செய்யப்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண். இதைக்கொண்டு தொழில் தொடங்குங்கள்.

பதிவு செய்யுங்கள்

பதிவு செய்யுங்கள்

வதந்தி 4: நான் விற்க நினைக்கும் பொருளுக்கு ஜிஎஸ்டியில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கு முன் உடனடியாக நான் பதிவு செய்துகொள்ள வேண்டுமா?

விளக்கம் : தொழில் தொடங்கிய 30 நாட்களுக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

வதந்தி 5: ஒரு மாதத்துக்கு மூன்று முறை வருமான வரி தாக்கல் செய்யப்பட வேண்டும்.

விளக்கம் : மாதத்துக்கு ஒரு முறை வருமானம் தாக்கல் செய்தால் போதும். இதில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் வணிகம் செய்பவர் தன் வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். மீதம் இரண்டு பகுதிகளும் கணினி மூலம் தானாக விரிவுபடுத்தப்படும்.

விலைப்பட்டியல்

விலைப்பட்டியல்

வதந்தி 6: சிறுதொழில் செய்யும் வணிகர்களும் கூட, தங்களின் வருமானத்தைத் தாக்கல் செய்கையில், விலைப் பட்டியலுடன் தாக்கல் செய்யவேண்டும்.

விளக்கம் : சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் மட்டும், தங்களின் மொத்த வியாபாரம் பற்றிய சுருக்கமான தகவலுடன் தாக்கல் செய்ய வேண்டும்.

வரி விகிதங்கள் அதிகம்

வதந்தி 7: பழைய மதிப்புக் கூட்டு வரிவிதிப்பு முறையின் வரி விகிதங்களை விட ஜிஎஸ்டியின் வரி விகிதங்கள் அதிகமானது.

விளக்கம் : பழைய வரிவிதிப்பு முறையில் சுங்க வரி மற்றும் இதர வரிகள் மறைமுகமாகப் பெறப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டியில் இந்த வரிகள் நேரடியாக வெளிப்படையாக பெறப்படுகிறது. இதனால் ஜி.எஸ்.டியின் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பது போல தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There are seven myths going around about GST which are not true. I want to dispel them one by one in form of myth and reality. myths people need to generate all invoices on computer/ internet only. Reality invoices can be generated manually also said Dr Hasmukh Adhia.
Please Wait while comments are loading...