இன்று பட்டென சரிந்த தங்கம் விலை.. வரும் நாட்களில் தொடருமா? சர்வதேச மார்க்கெட்டை பாருங்க புரியும்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கம் என மாறி மாறி இருந்து வருகிறது. தற்போது மார்கெட்டில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து சற்று மட்டுமே குறைந்துள்ளது. இதற்கிடையே தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் எப்படி இருக்கிறது.. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை உயர என்ன காரணம்! இப்போது திடீரெனக் குறைய என்ன காரணம்.. வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. குறிப்பாகக் கடந்த ஏப்ரல் 12ம் தேதி இதுவரை இல்லாத அளவாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8770 வரை சென்றது. இன்றைய தினம் தங்கம் விலை சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.8755க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 12ம் தேதி அதிகபட்சமாக ரூ.9567க்கு விற்பனையான தங்கம், இப்போது ரூ.9551க்கு விற்பனையாகிறது.

What will be the future of Gold Amid Trump to China bulk buying

தங்கம் விலை

நமது நாட்டில் தங்கம் விலை அதிகரிப்பதற்கும் குறைவதற்கும் சர்வதேச மார்கெட் தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. சர்வதேச மார்கெட்டில் என்ன நடக்கிறது. அங்குத் தங்கம் விலை எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இன்று காலை அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.1% சரிந்து $3,232.45ஆக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் ₹9,821.69ஆக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை அதிகபட்சமாக அவுன்ஸ் ஒன்றுக்கு $3,245.42 வரை சென்றது குறிப்பிடத்தக்கது. (ஒரு கிராம் ரூ.9,856). சர்வதேச மார்கெட்டில் எல்லாம் 24 கேரட் தங்கம் வர்த்தகமாகும் என்பதால் இது 24 கேரட் தங்கத்தின் விலை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம் தங்கம் பியூச்சர்ஸ் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.1% உயர்ந்து $3,248.20 (இந்திய மதிப்பில் ₹9,863)ஆக இருக்கிறது.

காரணம் டிரம்ப்

தற்போதைய சூழலில் தங்கம் விலை அதிகரிக்கச் சந்தேகமே இல்லாமல் டிரம்ப் தான் முக்கிய காரணமாக இருக்கிறார். டிரம்பின் வரிப் போர் காரணமாகவே தங்கம் விலை இப்படித் தாறுமாறாக உயர்ந்து உச்சம் தொட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தங்கம் விலை சுமார் 28% உயர்ந்துள்ளது. இதில் இருந்தே டிரம்பால் தங்கம் விலை எந்தளவுக்கு உயர்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

டிரம்பின் வர்த்தக பாலிசிகள் சர்வதேச அளவில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுகிறார்கள். இதன் காரணமாகவே தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து தங்கம் விலை அதிகரிக்கிறது. எப்போதுமே மார்கெட்டில் இதுபோல குழப்பங்கள் இருக்கும்போது தங்கத்தின் மீதான முதலீடுகளே அதிகரிக்கும். அதுவே இப்போதும் நடந்திருக்கிறது. தங்க விலை ஏற்றம் என்பது டிரம்பின் குழப்பமான பாலிசிகளையே காட்டுவதாக இருக்கிறது.

What will be the future of Gold Amid Trump to China bulk buying

திடீரென குறையும் தங்கம்

இப்படித் தங்கம் விலை அதிகரிக்கவே பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாகப் பலரும் கணித்துள்ளனர். அப்படியிருக்கும்போது இன்று தங்கம் விலை சட்டென ஏன் சரிந்தது என்ற கேள்வி பலருக்கும் வந்திருக்கும். அதற்கு வெள்ளை மாளிகையில் இருந்து வந்த முக்கிய அறிவிப்பே காரணமாகும். அதாவது அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் உட்பட மின்னணு பொருட்களுக்கும் செமி கண்டெக்டர் மற்றும் அதன் உதிரிப் பாகங்களுக்கும் வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குப் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் கூட எலக்டிரிக் பொருட்களே முதன்மையாக இருக்கிறது. இந்தச் சூழலில் எலக்டிரானிக் பொருட்களுக்கு விலக்கு கிடைத்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.8.755க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரும் நாட்களில் என்னவாகும்

அடுத்து இருப்பது மேஜர் கேள்வி.. வரும் நாட்களில் தங்கம் விலை உயருமா குறையுமா.. கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட பொருளாதார அமைப்புகள் தங்கம் விலை வரும் காலத்தில் உயரவே செய்யும் என்று கணித்துள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் $3,700 வரை செல்லும் எனக் கணித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம தங்கம் ₹11,236 வரை போகும் என கணிக்கப்பட்டுள்ளது. 24 கேரட் தங்கம் 11 ஆயிரத்தைத் தாண்டினால் ஆபரணத் தங்கமும் ரூ.10,000ஐ தாண்ட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இங்கு நாம் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது உலகின் பல்வேறு நாடுகளும் அமெரிக்கக் கடன் பத்திரங்களைக் குறைத்துக் கண்டு தங்கம் வாங்குவதை அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் தங்கத்தை அதிகம் வாங்கி வருகிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வரும் காலங்களில் மேலும் மேலும் தங்கத்தை வாங்குவதே அதிகரிக்கவே செய்யும் எனக் கூறப்படுகிறது.

What will be the future of Gold Amid Trump to China bulk buying

சீனா

சீனாவைப் பொறுத்தவரை மத்திய வங்கி மட்டுமின்றி மக்களும் தங்கத்தை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாகவே சீனாவில் ரியல் எஸ்டேட் தான் முதன்மையான முதலீடாக இருந்து வந்தது. ஆனால், இப்போது சீன ரியல் எஸ்டேட் துறை மிக மோசமாக அடி வாங்குகிறது. வரலாறு காணாத தேக்க நிலையில், ரியல் எஸ்டேட் சந்தையில் நிலவுகிறது. இதன் காரணமாகச் சீன மக்கள் பலரும் தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகிறார்கள். வரும் காலங்களிலும் சீன மக்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவார்கள் என்றே தெரிகிறது.

தங்கம் விலை என்னவாகும்!

அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் டிரம்பின் முறையற்ற வர்த்தக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளால் தங்கம் விலை வரும் காலத்தில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். டிரம்ப் சீனாவிற்கு எதிரான தனது வர்த்தகப் போரைத் தொடர்ந்து, அதேபோல 90 நாட்களுக்குப் பிறகு மற்ற நாடுகள் மீதான வரியையும் விதித்தால் தங்கம் விலை தொடர்ந்து உயரும். அதேநேரம் 90 நாட்களுக்கு மற்ற நாடுகளுடன் ஒரு உடன்பாடு ஏற்பட்டு, சீனா உடனும் டிரம்ப் சமரத்தை மேற்கொண்டால் அதன் பிறகு தங்கம் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது. இப்படி மதில் மேல் பூனையாகத் தங்கம் விலை இருப்பதால் முதலீட்டாளர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+