தங்கம் விலை எப்போது குறையும்.. புரியாமல் தவிக்கும் மக்கள்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க புரியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை ரூ.7000ஐ நெருங்கிவிட்டது. இதற்கிடையே தங்கம் விலை ஏற்றம் குறித்தும் இதற்கான காரணம் குறித்தும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் தங்கத்தில் தான் அதிகம் முதலீடு செய்வார்கள். ஏனென்றால் தங்கத்தைப் போல வேறு எதுவும் பொருளாதார பாதுகாப்பைத் தராது.

anand srinivasan personal finance


தங்கம் விலை: எதாவது ஆத்திர அவசரம் என்றால் தங்கத்தை வங்கியில் வைத்தால் அல்லது விற்றால் மிக ஈஸியாக லோன் கிடைக்கும். சில தனியார் நிறுவனங்கள் வீடு தேடி வந்து கூட லோன் தருகிறார்கள். அந்தளவுக்குத் தங்கத்தைப் பணமாக மாற்றுவது ஈஸி. இதன் காரணமாகவே மக்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். கொரோனா சமயத்தில் கூட மக்களுக்குத் தங்கமே உதவியது.

அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொரோனாவுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4000க்கு கீழ் தான் இருந்தது. ஆனால், கொரோனா வந்த பிறகு தங்கம் விலை மளமளவென உயரத் தொடங்கியது. அதன் பிறகு தங்கம் விலை குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

பணம் சம்பாதிக்க இருப்பது இரண்டே ரூல்ஸ்.. இதை எப்போதும் மறக்காதீங்க! சீக்ரெட் உடைத்த ஆனந்த் சீனிவாசன்


என்ன காரணம்: கொரோனாவுக்கு பிறகு வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்தது ஏன் என்ற கேள்வி பலருக்கும் வரலாம். பொதுவாக கொரோனா, போர் போன்ற காலகட்டத்தில் சந்தை மீது மக்களுக்கு நம்பிக்கை இழப்பார்கள். இதனால் சந்தையில் இருக்கும் பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தேவை அதிகரித்து விலை உயரும். கொரோனா, உக்ரைன் ரஷ்யா மோதல், இஸ்ரேல் ஹமாஸ் போர் என வரிசையாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததே விலை ஏற்றத்திற்குக் காரணம்.

கடந்த ஜூலை மாதமே தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7000ஐ நெருங்கியது. அப்போது நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அவர் இறக்குமதி வரியைக் குறைத்திருந்தார். அதன் பிறகே தங்கம் விலை ரூ.6500 என்ற ரேஞ்சுக்கு வந்தது. அதேநேரம், இப்போது வெறும் 3 மாதங்களில் மீண்டும் ரூ.7000க்கு தங்கம் விலை நெருங்கிவிட்டது.

உயர்வது ஏன்: தங்கம் விலை ஏன் இவ்வளவு வேகமாக உயர்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பல முறை விளக்கியுள்ளார். அதாவது அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கியதுமே தங்கம் விலை உயரும் என்பதை அவர் பல காலமாகச் சொல்லி வருகிறார். அதன்படியே கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தது முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

"டிராவிட்+ 10 வருடம்.." பணத்தை பல மடங்காக்கும் சூட்சுமமே இதுதான்.. ஆனந்த் சீனிவாசன் தந்த ஈஸி ஐடியா


ஆனந்த் சீனிவாசன்: அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைக்கும் என அறிவித்துள்ள நிலையில், தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தங்கம் விலை புதிய உச்சத்தை நிச்சயம் தொடரும் என்பதே ஆனந்த் சீனிவாசனின் கருத்தாக இருக்கிறது. மேலும், சென்னையில் இப்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,980க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், மும்பையில் அது ஏற்கனவே ரூ.7000ஐ தாண்டிவிட்டதாக ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.

வரும் காலத்தில் தங்கம் விலை மேலும் மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. குறைந்தாலும் பெரியளவுக்கு குறையாது. ஆனாலும், தங்கம் என்பது ஆபத்தான காலத்தில் உதவுக்கூடியது என்பதால் மக்கள் தங்கம் வாங்க இதுவே சிறந்த சான்ஸாக இருக்கும். ஏனென்றால் மீண்டும் இதே விலைக்குத் தங்கம் வருமா என்பது பெரிய கேள்விக்குறிதான். இது வெறும் செய்தி மட்டுமே.. இதைப் பொருளாதார ஆலோசனையாக யாரும் கருதக்கூடாது. நிதி முதலீடுகளை மேற்கொள்ளும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகருடன் கலந்தாலோசிக்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+