சாகாத 102 வயது முதியவருக்கு இறுதி ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
சண்டிகர்: அரியானா மாநிலம் ரோடக்கில் 102 வயது முதியவரை தேரில் அமர வைத்து ஊர்வலமாக ஆடல் பாடலுடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமந்து சென்ற நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தை சேர்ந்தவர் தூலி சந்த். இவருக்கு 102 வயதாகிறது. மாநில அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தூலி சந்த் பயன்பெற்று வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது அரியானா மாநில பாஜக அரசு.

தூலி சந்த்
ரூ.2,500 ஓய்வூதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த தூலி சந்த், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் காரணமாக கடும் இன்னல்கள்களை சந்தித்து வந்துள்ளார். தான் உயிரோடு இருப்பதை பல முறை அதிகாரிகளிடம் தூலி சந்த் தெரிவித்ததாகவும் ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இறுதி ஊர்வலம்
இந்த நிலையில் தான் உயிரோடு இருப்பதை அரசாங்கத்திடம் நிரூபிக்க ஒரு முடிவை கையில் எடுத்தார் தூலி சந்த். இதற்காக தனது உறவினர்கள், ஊர் மக்கள் உதவியுடன் தான் உயிரோடு இருக்கும்போதே உறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தார் அவர். இதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர்.

ஆட்டம், பாட்டம்
இறந்தவர்களின் உடல்களை அமர வைத்து கூலிங் கிளாஸ் அணிந்து ஊர்வலமாக தூக்கிச் செல்வதைபோன்றே உயிரோடு இருக்கும் தூலி சந்துக்குக்கு கூலிங்கிளாஸ், தலைப்பாகையில், மாலை அணிவித்து அமர வைத்து உறவினர்கள், ஆட்டம் பாட்டத்துடன் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

மார்ச் மாதம்
அவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் தூலி சந்துக்கு 102 வயதாகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு மீண்டும் அரசு பென்சன் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேசிய தூலி சந்த், "என்னுடைய ஓய்வூதியத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கினேன்.

கோரிக்கை
நான் இறந்துவிட்டதாக அரசு ஆவணங்களில் கூறப்பட்டு இருந்ததால் எனக்கான ஓய்வூதியத்தை அரசு நிறுத்திவிட்டது. அன்றிலும் உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடி வருகிறேன். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை." என்று கூறி ஆதார் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றை சமர்பித்தார்.












Click it and Unblock the Notifications