பாவம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி.. மாமாவே பலாத்காரம் செய்த கொடூரம்! போக்சோவில் கைது

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று முறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் சிறுமி தற்போது கருவுற்றிருக்கிறாள்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் மாமா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்த போக்கு

ரத்த போக்கு

ஹரியானாவின் பஞ்சகுலா பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பகுதியில் பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்திருக்கிறார். இதில் அவரது இளைய மகளுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்திருக்கிறது. இதனால் மருத்துவமனை, வீடு என அலைந்து திரிந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் திடீரென சிறுமிக்கு ரத்த போக்கு அதிக அளவில் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு அஞ்சிய அவர் சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். ஆனால் எந்த விவரத்தையும் குழந்தை கூறவில்லை.

புகார்

புகார்

இவ்வாறு இருக்கையில், சமீப நாட்களாக சிறுமி சோர்வாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். அப்போதும் சிறுமி எதையும் கூறவில்லை. பின்னர் கடந்த ஜூலை 2ம் தேதி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருக்கையில் மருத்துவர்கள் சிறுமி கருவுற்றிருப்பதாக கூறியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ந்து போயுள்ளார். பின்னர் தீவிரமாக விசாரிக்கையில் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, பரிசோதனைக்காக தாய் மருத்துவமனைகளுக்கு அலைந்துகொண்டிருக்கையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி சிறுமியின் மாமா பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்

புகார்

புகார்

முதலில் கடந்த மே 11 அன்றும், அதன் பின்னர் ஜூன் 13 அன்றும் இந்த கொடூரம் நடந்துள்ளது. அப்போதுதான் அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மற்றொரு முறையும் சம்பவம் நடந்துள்ளது. விஷயம் அறிந்த தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லை. மட்டுமல்லாது சிறுமியின் உடல்நிலையை கவனிக்க தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்ததால் புகாரின் மீது போதிய அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடைப்பட்ட காலத்தில் மாமாவுக்கு ஆதரவாக உறவினர் சிறுமியின் தாயை மிரட்டியுள்ளனர்.

கைது

கைது

புகார் கொடுத்தால் மூத்த மகளை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால் மனம் தளராத தாய் முதலமைச்சரின் தனிப் பிரிவிலும், மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் சிறுமியின் மாமாதான் இந்த குற்றத்தை செய்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் சிறுமியையும் சிறுமியின் சகோதரியையும் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டி இருந்திருக்கிறார்.

விசாரணை

விசாரணை

உண்மை வெளிவந்ததையடுத்து சிறுமியின் மாமா உடனடியாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மறுபுறம் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்த உறவினர்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியை உறவினர் ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+