பாஜகவும் காங்கிரசும் மட்டமான அரசியல் செய்கின்றன.. கெஜ்ரிவால் ஆவேச குற்றச்சாட்டு!
சண்டிகர்: பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் 'கேவலமான அரசியலில்' ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
கடந்த மாதம் பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்பு மீறல் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கெனவே கேள்வி எழுப்பினார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமர் மோடி பயணத்தில் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டார், இந்த விஷயத்தில் சரியாக செயல்படவில்லை என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ''சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா கட்சியின் முதல்வர் வேட்பாளர் பல்பீர் ராஜேவால், தேர்தலில் போட்டியிட டிக்கெட்டுகளை விற்றதாக ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார். அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், பஞ்சாப்பில் இருந்து நாங்கள் இடத்தை காலி செய்கிறோம்'' என்றார்.

பாதுகாப்பு
''ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், பொதுப் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பேற்போம் என்று ஒவ்வொரு பஞ்சாபிக்கும் நான் இங்கு உறுதியளிக்க விரும்புகிறேன். தேசிய அல்லது உள் பாதுகாப்பு தொடர்பான எந்த அரசியலிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம். பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் 'கேவலமான அரசியலில்' ஈடுபட்டன'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

பிரதமர்
கடந்த மாதம் பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் பாதுகாப்பு மீறல் இருந்ததால், பஞ்சாப் பயணத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் டெல்லி சென்றார் பிரதமர். இதனால் பிரதமர் பாதுகாப்பு கேள்விக்குறியானது, அவர் உயிருக்கு ஆபத்து என்றும் பாஜகவினர் தொடர்ந்து காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், பிரதமர் பாதுகாப்பு குறித்து, பஞ்சாப் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ஒவ்வொரு பிரசாரத்திலும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.

கெஜ்ரிவால்
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். "பஞ்சாபில் ஆட்சிக்கு வந்தால், பஞ்சாப் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பிரச்சினையில் மத்திய அரசுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் செயல்படும்" என்றார்.

ஆம் ஆத்மி
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மாற்றம் கொண்டு வரவே ஆம் ஆத்மி போட்டியிடுவதாக அறிவித்தது. பஞ்சாப் முதல்வரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என கூறப்பட்டு, அதற்காக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 21 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று பகவந்த் மான் தேர்வானார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications