''பஞ்சாப்பில் பாகிஸ்தானை பிரதிபலிக்கிறார்கள்..'' - ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக சாடிய பிரதமர்
சண்டிகர்: ஆம் ஆத்மி தலைவர் பஞ்சாப் மாநில முதல்வராக ஆசைப்படுகிறாரா அல்லது காலிஸ்தான் முதல்வராக ஆசைப்படுகிறாரா என பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைத் தாக்கிப் பேசியிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அப்ரோஹாவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று முனைப் போட்டி நிலவுகிறது. இதில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது.

பிரதமர் மோடி
தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''அவர்களுக்கு இந்தியாவை உடைக்க வேண்டும், அதிகாரத்தைப் பெற வேண்டும். அதற்காக அவர்கள் பிரிவினைவாதிகளுடன் கைகோர்ப்பார்கள்'' என ஆம் ஆத்மி கட்சிப் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார்.

ஆம் ஆத்மி
டெல்லியில் காலூன்றியதைப் போல், பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி வளர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி குறித்து பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பிரதமர் மேலும் கூறுகையில், ''ஓட்டு வங்கிக்காக நாட்டைப் பிரிக்கத் தயாராக இருக்கிறார்கள். பஞ்சாப் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக இருந்த கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அவரது நெருங்கிய நண்பரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்'' என ஆம் ஆத்மி பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்தும் விமர்சனம் செய்தார் பிரதமர்.

பாகிஸ்தான்
''ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை உடைக்க விரும்புகிறார்கள். அதிகாரத்தைப் பெற பிரிவினைவாதிகளுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் நாட்டை உடைக்கத் தயாராக உள்ளனர். அவர்களின் கொள்கைகள் பாகிஸ்தானின் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதல்ல. அதனால்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பாகிஸ்தானின் கொள்கையை எதிரொலிக்கிறார்கள். அவர்கள் பஞ்சாபில் போதைப்பொருள் வலையமைப்பை அதிகரிக்க விரும்புகிறார்கள்.

ராகுல் காந்தி
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காலிஸ்தான் குறித்து பேசி பிரசாரம் செய்து வருகின்றனர். காலிஸ்தானுடன் பிரதமர் இன்று ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன் பஞ்சாப் பிரசாரத்தில், ''காங்கிரஸ் கட்சியினர் ஒரு போதும் தீவிரவாதிகள் வீட்டுக்கு செல்வதில்லை'' என கெஜ்ரிவால் காலிஸ்தான் தலைவர் வீட்டில் இருந்ததை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications