கண் கலங்க வைத்த வீடியோ! பேச முடியாது - காதும் கேட்காது.. அடிப்படை வசதிகோரிய மாணவர்களின் போராட்டத்தை பாருங்க.. பாவம்யா
சண்டிகர்: நம்முடைய வாழ்க்கையில் நாம் பல போராட்டங்களை பார்த்து இருப்போம். அகிம்சை வழி, அமைதி வழி, உண்ணாவிரதம் என்பது போராட்டத்தின் ஒரு வடிவம். இந்த போராட்டத்தில் கோஷம் எதுவும் இருக்காது. ஆனால் கண்டன ஊர்வலம், சாலை மறியல், முற்றுகை என்ற வடிவில் உள்ள போராட்டங்களில் கோஷங்களும், ஆக்ரோஷமான அணுகுமுறைகளும கூட இருக்கும். ஆனால் சண்டிகரில் பேச முடியாத, காது கேளாத மாணவ-மாணவிகள் அடிப்படை வசதிக்காக 'சைகை' மொழி காட்டி போராடிய வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ஒன்று தெளிவாக புரியும்.. போராட்டம் தான் ஒவ்வொருவரின் உரிமைகளை பெற்று கொடுக்கும். எந்தவொரு உரிமையும் தானாகக் கிடைப்பது இல்லை. மறுக்கப்படும் உரிமைகள் கிடைக்க முறையான மற்றும் தொடர்ச்சியான போராட்டங்கள் அவசியம் என்பது பல சரித்திரங்கள் வழியாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இதனால் தான் ஒவ்வொருவரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட தொடர் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் நடத்திய போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதான் போராட்டத்தின் வீரியம்.
அந்த வகையில் தான் தங்களின் கோரிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த சண்டிகரில் பேச முடியாத - காது கேளாதோர் மாணவ-மாணவிகள் நடத்திய போராட்டம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. சண்டிகரில் காது கோளாதோர் - வாய் பேச முடியாத மாணவ - மாணவிகளுக்கான பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
தங்களால் பேச முடியாது, மற்றவர்கள் சொல்வதை கேட்க முடியாது என்பதால் அதிகாரிகளும் அலட்சியம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை பதாகைகளில் எழுதி வைத்திருந்தனர். அதுமட்டுமின்றி தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறத்தி அவர்கள் சாலையில் அமர்ந்து போராடினர். பேச முடியாததால் அவர்கள் வெறும் சத்தத்தை மட்டுமே எழுப்பி சைகை காட்டி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
Maybe this is a first for Chandigarh.
— Rishu Raj Singh (@rishuraj_chd) August 13, 2026
Deaf & mute school students came out to protest for basic facilities and better education.
They cannot speak. They cannot raise slogans. So they tried to shout, make noise and make themselves heard, hoping that their voices would somehow… pic.twitter.com/GH4g8Nfdy1
இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காது கோளாமல், வாய் பேச முடியாத மாணவர்கள் தங்களின் அடிப்படை வசதிக்காக சத்தம் எழுப்பி போராடியது அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோ பார்க்கும் பலரும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை டுக்க வேண்டும். இது ரொம்ப பரிதாபமாக உள்ளது. ஏற்கவே முடியாது என்று கொந்தளித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தின்போது மாணவர்கள் பிரதானமான 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். முதலாவது என்னவென்றால் பள்ளியில் நன்கு பாடம் கற்பித்து தரும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 2வது 9 ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கணிதம், அறிவியல் பாடங்களை சொல்லி கொடுக்க வேண்டும்.
3வது, சைகை மொழி ஆசிரியர்களுக்கு கட்டாயம் என அறிவிக்க வேண்டும். 4வது மதிய உணவை தரமாக வழங்க வேண்டும். 5வது மாணவ-மாணவிகளுக்கு வாகனங்களில் பிக்-அப், டிராப் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். 6வது பயணத்திற்காக எலக்ட்ரிக் பஸ் வசதி ஏற்படுத்தி அதற்கான சார்ஜிங் வசதியை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
