சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சாப் பல்கலைக்கழக மாணவிகள் விடிய விடிய போராட்டம்- விசாரணைக்கு அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

சண்டீகர்: சண்டீகர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளின் குளியல் வீடியோ ஆன்லைனில் சக மாணவியால் கசியவிடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து அந்த பல்கலைக்கழக மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டீகர் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த 60 மாணவிகள் குளிக்கும் வீடியோக்களை ஆபாச இணையதளத்தில் வெளியானதால் சில மாணவிகளள் தற்கொலைக்கு முயன்றனர்.

இந்த நிலையில் தன்னுடன் பயிலும் சக மாணவியே இது போல் ஆபாசமாக வீடியோ எடுத்து ஆண் நண்பர்கள் மூலம் ஆன்லைனில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவி கைது செய்யப்பட்டார்.

மாணவிகளின் குளியல் வீடியோ லீக்... அப்படி எதுவும் நடக்கவில்லையென காவல்துறை மறுப்பு... மூவர் கைது மாணவிகளின் குளியல் வீடியோ லீக்... அப்படி எதுவும் நடக்கவில்லையென காவல்துறை மறுப்பு... மூவர் கைது

வீடியோ

வீடியோ

ஆபாச வீடியோ வெளியானதால் மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக விடிய விடிய மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார். ஒரு மாணவி கைது செய்யப்பட்ட நிலையில் முதல்வர் பகவந்த் மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சண்டீகர்

சண்டீகர்

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சண்டீகர் பல்கலைக்கழகத்தில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவம் கவலை அளிக்கிறது. நமது பிள்ளைகள்தான் நமது கவுரவம். சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நிர்வாகத்துடன் நான் தொடர்பில் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைதி காக்கவும்

அமைதி காக்கவும்

அது போல் மாணவிகள் அமைதி காக்குமாறு பஞ்சாப் மாநில கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத்சிங் பைன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த 8 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிகிறது. ஆனால் இது உண்மையல்ல என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சோனு சூட் கோரிக்கை

சோனு சூட் கோரிக்கை

இதுகுறித்து சண்டீகரை சேர்ந்த பிரபல நடிகர் சோனு சூட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சண்டீகர் பல்கலைக்கழகத்தில் நடந்திருப்பது துரதிருஷ்டவசமான சம்பவம். இது நமது சகோதரிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய நேரம். அதே வேளையில் சமுதாயத்திற்கு முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English summary
Punjab CM Bhagawant Maan orders for inquiry in Chadigarh University girl student's obscene videos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X