சிக்கிய தேர்தல் அதிகாரி.. பாஜக வெற்றி செல்லாது! உச்சநீதிமன்ற தீர்ப்பு எச்சரிக்கை -ஸ்டாலின் சுளீர்
சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுக்கும் இந்தியா கூட்டணி (காங்கிரஸ் + ஆம் ஆத்மி) ஓரணியில் போட்டியிட்டன. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் குல்தீப், பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் ஆகியோர் இந்தியா கூட்டணியில் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் + ஆம் ஆத்மி கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜகவுக்கு 16 வாக்குகளே விழுந்தது.

அப்படி என்றால் எண்ணிக்கை அடிப்படையில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி தானே வெற்றிபெற்று இருக்க வேண்டும்? ஆனால் அதுதான் இல்லை. தேர்தலை நடத்திய அதிகாரியோ இந்தியா கூட்டணிக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 செல்லாது என அறிவிக்க அதிர்ச்சியடைந்தனர் ஆத் ஆத்மி - காங்கிரஸ் கட்சியினர். அங்கேயே அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த அதெல்லாம் எனக்கு தெரியாத என வாக்குச்சீட்டில் பேனால் டிக் செய்தும் கிராஸ் செய்து வாக்குகளை செல்லாது என அறிவித்து, பாஜகவை சேர்ந்த வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரியின் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தேர்தல் அதிகாரி பல வாக்குகளில் பேனாவை கொண்டு அழிப்பதைப் பயன்படுத்துவது தெளிவாக பதிவாகி இருந்தது. தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. முந்தைய அமர்விலேயே தேர்தல் அதிகாரியின் நடவடிக்கையை தலைமை நீதிபதி கடுமையாக கண்டித்ததுடன் இது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது என விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். மேயர் தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதை உறுதிபடுத்திய தலைமை நீதிபதி, அரிதாக பயன்படுத்தும் 142 வது பிரிவின் மூலம் உச்சநீதிமன்றத்திலேயே வாக்குச்சீட்டுகளை எண்ணி ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப்பை மேயர் என்று அறிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், "சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதி மற்றும் சட்ட ஆட்சிக்கு கலங்கரை விளக்கமாக அமைந்து உள்ளது. அரிதினும் அரிதான 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி தேர்தல் முறைகேட்டை தடுத்து உள்ளது உச்சநீதிமன்றம். 2024 தேர்தலில் பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications