வீடியோவை காட்டி ஓட்டல் அதிபரிடம் மிரட்டல்.. மாடல் அழகி சுட்டு கொலை.. கால்வாயில் உடல் மீட்பு
சண்டிகர்: அந்தரங்க படங்களை காட்டி ஹோட்டல் அதிபரிடம் பணம் பறிக்க முயற்சித்த முன்னாள் மாடல் அழகி திவ்யா பகுஜாவை, அந்த ஹோட்டல் உரிமையாளர் தரப்பு சுட்டுக்கொன்றது. கடந்த சில நாட்களாக அவரது உடலை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கால்வாயில் கண்டெடுத்துள்ளனர்.
ஹரியானாவில் சிட்டி பாயிண்ட் என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங்குடன் பிரபல மாடல் அழகி திவ்யா பகுஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதற்கிடையில், மாடல் அழகி திவ்யா பகுஜா, அபிஜீத் சிங்குடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். பிறகு இந்த வீடியோவை காட்டி ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங்கை மிரட்டத் தொடங்கியிருக்கிறார். பணம் கேட்டு அபிஜித் சிங்கை திவ்யா பகுஜா மிரட்டியுள்ளார். இதனால், திவ்யா பகுஜா மீது கோபத்தில் இருந்த ஹோட்டல் சிட்டி பாயிண்ட் ஹோட்டல் உரிமையாளர் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி பகுஜாவை ஹோட்டல் சிட்டிக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் ஹோட்டல் அறையில் வைத்து திவ்யா பகுஜாவை அந்த கும்பல் சுட்டுக்கொன்றுள்ளது. அதன்பிறகு திவ்யா பகுஜாவின் உடலை வெள்ளை ஷீட் ஒன்றில் சுற்றி காரின் பின்பக்கம் உள்ள பூட்டில் வைத்து எடுத்து சென்றுள்ளார். அப்ஜித் சிங்கும் உடன் சென்றுள்ளார்.
சில கிலோ மீட்டர்கள் சென்ற பிறகு உடலை எடுத்து சென்ற காரை கில் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றனனர். பின்னர் இந்த கார் பாட்டியாலா பஸ் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்தது. இதற்கிடையே, பல்ராஜ் கில்லை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. கில் அளித்த தகவலின் பேரில் போலீசார் திவ்யா பகுஜாவின் உடலை தீவிரமாக தேடினர்.
இந்த நிலையில், பகாரா கால்வாயில் இருந்து மாடல் அழகி திவ்யா பகுஜாவின் மீட்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை இந்த கொலை சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திவ்யா பகுஜாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இந்த வழக்கை விசாரித்து வருவதாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications