சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 ஆண்டுகளை நெருங்கும் ஜிஎஸ்டி.. ஜூலையில் காத்திருக்கும் அதிர்ச்சி - எதற்கெல்லாம் வரி உயர்வு?

Google Oneindia Tamil News

சண்டிகர்: 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் மாதம்தோறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டு வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 GST new rates - List of products and Services have levied high taxes

இந்த நிலையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ள மற்றும் விலை குறைய வாய்ப்பு இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் என்னவென்று பார்ப்போம்.

  • பேக்கேஜிங் செய்யப்பட்ட மீன், தயிர், லஸ்ஸி, பன்னீர், தேன், உலர்ந்த பருப்பு காய்கறிகள், கோதுமை மாவு, பருப்பு, நாட்டுச் சக்கரை, பொரி, இயற்கை உரம், தேங்காய் துருவல் ஆகியற்றுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படடாது என்றும், 5 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்.இ.டி. விளக்குகள், அச்சு இங்க், சோலார் வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான தலைகீழ் வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது.
  • வங்கி செக்குகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.
  • வரைபடங்கள் (மேப்), சார்டுகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
  • ரூ.1,000 க்கும் குறைவான வாடகை கொண்ட ஹோட்டல் அறைகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது 12 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.
  • தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் மீதான வரி ஏய்ப்பை தடுக்க மாநிலங்களுக்கு இடையே அவற்றை கொண்டு செல்வதற்காக விதிக்கப்பட்ட இ வே பில் வரம்பிலிருந்து மாநிலங்கள் கூடுதலாக வரி வரம்பை நிர்ணயிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
English summary
GST new rates - List of products and Services have levied high taxes: 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X