ஹரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி- முதல்வராக கட்டார் தீபாவளிக்கு பின் பதவியேற்பு?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    BJP's Manohar Lal Khattar to be sworn-in as the Cheif Minister of Haryana on tomorrow.

    சண்டிகர்: ஹரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. அம்மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் தீபாவளிக்கு பின்னர் பதவி ஏற்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆளும் பாஜக 40; காங்கிரஸ் 31 இடங்களில் வென்றன. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10 இடங்களைக் கைப்பற்றியது.

    Manohar Lal Khattar to be sworn-in as the CM of Haryana tomorrow

    சுயேட்சைகள் 7 பேரும் ஹரியானா லோகித் கட்சி 1; இந்திய தேசிய லோக் தள்- 1 இடத்திலும் வென்றன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

    ஆனால் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் இந்த பெரும்பான்மையைப் பெறவில்லை. இதனால் ஹரியானாவில் தொங்கு சட்டசபை உருவானது.

    அதேநேரத்தில் தங்களுக்கு முதல்வர் பதவியை அளித்தால் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என 10 இடங்களில் என்ற ஜேஜேபி அறிவித்தது. ஆனால் பாஜகவோ சுயேட்சைகளை வளைத்திருக்கிறது.

    தற்போது சுயேட்சைகளின் ஆதரவுடன் ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் நாளை முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவித்தன. தற்போது தீபாவளிக்குப் பின்னர் கட்டார் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+