பாகிஸ்தான் தாக்க நினைத்த விமானப்படை தளம்.. நேரில் சென்று பிரதமர் மோடி செய்த செயல்.. செம
டெல்லி: பாகிஸ்தானை கதறவிட்ட நம் நாட்டின் விமானப்படையினர் மற்றும் ராணுவ வீரர்களை பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமான தளத்தில் இன்று பிரதமர் மோடி சந்தித்து பாராட்டியதோடு அவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடி சென்ற இந்த விமானப்படை தளம் என்பது பாகிஸ்தான் தாக்க முயன்று தோல்வியடைந்த இடமாகும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7 ம் தேதி நம் நாட்டின் முப்படைகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தின. இதில் விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தன. ஏவுகணை மற்றும் ஹம்மர் குண்டுகளை பயன்படுத்தி விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தான் குறிவைத்து தாக்க நினைத்த விமானப்படை தளத்தில் இந்த ஆதம்பூர் விமானத்தளமும் ஒன்று. அங்கு தான் இன்று பிரதமர் மோடி சென்று விமானப்படையினருடன் கலந்துரையாடியானார். நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட இருநாடுகள் இடையேயான டென்ஷன் மட்டும் குறையவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் ஆகியவற்றின் சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷீர் உள்ளிட்டவற்றின் எல்லையோர பகுதியில் பதற்றம் இன்னும் நீடிக்கிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானதளத்துக்கு விசிட் செய்தார். அங்கு அவர் விமானிகள், விமானப்படை வீரர்கள், ராணுவ வீரர்களை சந்தித்து பாராட்டினார்.
அதுமட்டுமின்றி அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‛‛உங்களுக்கு எப்போது இந்தியா நன்றியுணர்வுடன் இருக்கும்'' என்று கூறினார். பாகிஸ்தான் குறிவைத்து தாக்க நினைத்த விமானப்படை தளத்தில் இந்த ஆதம்பூர் விமானத்தளமும் ஒன்று. ஆனால் நம் படை வீரர்களும், வான்வெளி பாதுகாப்பு அமைப்பும் அந்த தாக்குதலை முறியடித்தது.
இந்நிலையில் தான் இன்று பிரதமர் மோடி அங்கு சென்று விமானப்படை மற்றும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அனைத்து வீரர்களையும் பாராட்டினார். அவர்களின் துணிச்சல் மிக்க செயல்களை எடுத்து கூறி இந்தியாஎப்போதும் நன்றியுணர்வுடன் இருக்கும் என்று ஊக்கப்படுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛இன்று காலை நான் ஆதம்பூர் விமான தளத்துக்கு சென்றேன். நமது துணிச்சல்மிக்க விமானப்படை வீரர்கள், ராணுவ வீரர்களைசந்தித்தேன். துணிச்சல், பயமின்மை, உறுதித்தன்மை உள்ளிட்டவற்றின் மொத்த உருவமாக இருக்கும் அவர்களுடன் இருப்பது சிறப்பான அனுபவமாக அமைந்தது. நமது நாட்டிற்காக நமது ஆயுதப்படைகள் செய்யும் பணி அனைத்திற்கும் இந்தியா நன்றியுணர்வுடன் இருக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் இந்த விமானப்படை தளத்தில் தான் எஸ் 400 வான் பாதுகாப்பு சிஸ்டமை அழித்ததாக கூறியது. பாகிஸ்தானின் ஜேஎப் 17 ரக போர் விமானம் நடத்திய தாக்குதலில் எஸ் 400 வான் பாதுகாப்பு சிஸ்டமை அழித்துவிட்டோம் என்று பாகிஸ்தான் பொய்யான தகவல்களை பரப்பியது. அதனை நம் நாடு மறுத்த நிலையில் பிரதமர் மோடி இன்று ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு விசிட் செய்து வீரர்களை பாராட்டி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications