சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்... வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்! ஜூலை 1 முதல் பஞ்சாப்பில் அமலாகிறது

Google Oneindia Tamil News

சண்டிகர்: சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கூறியதுபோல் ஜூலை 1 முதல் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு இன்று அறிவித்துள்ளது.

பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் காங்கிரஸை வீழ்த்தி, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. பகவந்த் மான் புதிய முதல்வராக பொறுப்பு ஏற்று செயல்பட்டு வருகிறார்.

நான் துப்புரவு தொழிலாளி... பணியை விடவே மாட்டேன்... முதல்வரை தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின் தாய் உருக்கம் நான் துப்புரவு தொழிலாளி... பணியை விடவே மாட்டேன்... முதல்வரை தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின் தாய் உருக்கம்

300 யூனிட் மின்சாரம் இலவசம்

300 யூனிட் மின்சாரம் இலவசம்

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று பஞ்சாப் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.

மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி கடந்த மார்ச் மாதம் 16ல் ஆட்சி அமைத்தது. பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். ஆட்சியமைத்து இன்றுடன் ஒருமாதம் ஆகும் நிலையில் தான் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அந்த மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.

84 சதவீதம் பேர் பயன்

84 சதவீதம் பேர் பயன்

பஞ்சாப் மாநில மின்வாரிய விபரங்கள் அடிப்படையில் பார்த்தால் மாதம் 62.25 லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இது மாநிலத்தில் உள்ள மொத்த வீடுகளுக்கான மின்நுகர்வோரில் 84 சதவீதம் பேர் ஆவர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதைபோல் பஞ்சாப்பில் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

 முன்பு நடந்தது என்ன

முன்பு நடந்தது என்ன

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது முதல் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப்பில் அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரம் போலீஸ் உள்பட 25 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களுக்கு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையும் குறைக்கப்பட்டது.

English summary
The Aam Aadmi Party (AAP) government in Punjab has announced 300 units of free power to domestic consumers from July 1 onwards.சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கூறியதுபோல் ஜூலை 1 முதல் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு இன்று அறிவித்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X