பொதுவாழ்க்கைல உயிருக்கு பயம் கூடாது, படேலின் வார்த்தைகளுடன் பஞ்சாப் முதல்வரின் ட்விஸ்ட் ட்விட்..!
சண்டிகர் : பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக சர்தார் வல்லபாய் பட்டேலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, உயிருக்கு பயந்தவர்கள் பொது வாழ்வுக்கு வரக்கூடாது என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.
ஆனால் அப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டு இருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. இதையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி
இந்தப் பிரச்சினை காரணமாக பஞ்சாப் அரசைக் கலைக்க வேண்டும் என ஹரியானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறார். பிரச்சனை தற்போதைக்கு ஓயாது என்ற நிலை உள்ள நிலையில் தற்போது பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிவெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல உள்ளது.

பஞ்சாப் அரசு மீது குற்றச்சாட்டு
பிரதமரின் பாதுகாப்பில் மீறல் குறித்த விவகாரத்தை வைத்து பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல பஞ்சாப் அரசும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சதி செய்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பிரதமரைக் காக்க துப்பாக்கி குண்டைக்கூட எதிர்கொள்ளத் தயார் என்று ஏற்கெனவே கூறியிருந்ததாகவும், இதையும் தாண்டி வேறு என்ன நான் செய்ய வேண்டும் எனவும், என் மணிக்கட்டை அறுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

உயிருக்கு பயப்படக் கூடாது
இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் புகழ்பெற்ற வாசகம் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், தனது கடமையை விடவும் உயிரைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர், இந்தியா போன்ற தேசத்தில் உயர்ந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வல்லபாய் படேல் சொன்ன வார்த்தைகளை அவரது படத்துடன் மேற்கோள் காட்டியிருக்கிறார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி. நேற்று இரவு சன்னி பதிவிட்டுள்ள இந்த ட்விட்டர் ட்வீட்டுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
Recommended Video

ஆவேசமான பஞ்சாப் முதல்வர்
தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய சன்னி, மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கம் கொலை நோக்கத்துடன் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாக பதிலளித்தார். அவருடைய உயிருக்கு எங்கே அச்சுறுத்தல் வந்தது? பிரதமரை சுற்றி ஒரு கிலோமீட்டருக்குள் யாரும் இல்லை,கல்லெறியப்படவில்லை, கோஷங்கள் எழுப்பப்படவில்லை எனவும், பிர்ச்ச்சினைக்கு தான் தான் உயிரூட்டினேன் என்று எப்படிச் சொல்ல முடியும் எனவும், பெரிய தலைவரான உங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும், நீங்கள் பொறுப்பான அறிக்கைகளை வெளியிட வேண்டும் எனவும், எங்கள் பிரதமரை நாங்களே கொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களா? எனவும் சன்னி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications