பஞ்சாப்: செய்ய கூடாத வேலையெல்லாம் செய்து.. நேரம் பார்த்து காலை வாரிய சித்து.. ராகுல் பிளான் போச்சு
சண்டிகர்: பஞ்சாப் அரசியலில் காங்கிரஸ் கட்சிக்குள் செய்ய கூடாத வேலையெல்லாம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.
Recommended Video
அதேநேரம் காங்கிரஸ் கட்சியில் தொடருவேன் என்று கூறியுள்ளார். ஆனால், இவரை மலை போல நம்பி, அம்ரிந்தர் சிங்கை பகைத்துக் கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய காங்கிரஸ் இளம் தலைவர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது சித்து செய்த இந்த ஸ்டன்ட்.
கடந்த சில ஆண்டுகளாகவே, ராகுல் காந்தி பெரிதாக நம்பியவர்கள் எல்லோரும் காலை வாரியுள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பஞ்சாப்பில் சித்துவும் இப்போது அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்.

தலைவராக அமரிந்தர் சிங்
பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் வலுவான ஒரு பிராந்திய தலைவராக இருந்து வந்தார். ஆனால் அவருக்கு எதிராக சித்து தலைமையில் கோஷ்டி உருவானது. இதனால்தான், 10 நாட்கள் முன்பாக தனது முதல்வர் பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

சித்து குழப்பம்
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 40 எம்எல்ஏக்கள், கேப்டன் அமரிந்தர் சிங் தலைமை மீது அதிருப்தி தெரிவித்தும் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறியும் கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதன் பின்னணியில் சித்து இருந்தார். மேலும் பகிரங்கமாகவும் அமரிந்தர் சிங்கை விமர்சனம் செய்து வந்தார்.

காங்கிரஸ் தலைவர் சித்து
கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி காங்கிரஸ் மாநில தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்தில் அமரிந்தர் சிங்கிற்கு விருப்பம் இல்லை. இத்தனைக்கும் பாஜகவிலிருந்து வந்து காங்கிரசில் சேர்ந்தவர்தான் சித்து. எனவே, சோனியா காந்திக்கு அமரிந்தர் சிங் கடிதம் எழுதி அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்படியும் கூட, அதை சோனியா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில், நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் தலைவரானதால் அமரிந்தர் சிங் அதிருப்திக்குள்ளாகினார்.

முக்கியத்துவம் இல்லை
2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் பிரசார நடவடிக்கைகளை சித்து வழிநடத்தினார். அப்போதே முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு முக்கியத்துவம் குறைந்தது. தேர்தலுக்குப் பிறகு முதல்வரின் செயல்பாடுகளை நவ்ஜோத் சிங் சித்து வெளிப்படையாக விமர்சித்தார்.

பாகிஸ்தான் ஜெனரல் பாஜ்வா
முதலில் பிரச்சினை ஆரம்பித்தது, பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியர்கள் சென்று வர ஏதுவாக கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டபோது ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியில் நவ்ஜோத் சித்து பங்கேற்றார். அப்போது அந்நாட்டின் ஜெனரல் பாஜ்வாவை சித்து கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இதை முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் கடுமையாக சாடினார்.

அமைச்சர் பதவி பறிப்பு
அப்போது சித்து அமரிந்தர் சிங் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். முதல்வருக்கும் அமைச்சருக்கும் இடையிலான கருத்து மோதல்கள் அமைச்சரவை கூட்டங்களிலும் வெளியிலும் தொடர்ந்த நிலையில், சித்துவின் துறையை அமரிந்தர் சிங் மாற்றினார். ஆனால், அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய துறையின் அமைச்சர் பதவியை ஏற்காமல் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து.

ஆட்சிக்கு எதிராக சித்து பிரச்சாரம்
பின்னர், தமது யூடியூப் பக்கம் மூலம் அமரிந்தர் சிங் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டத் தொடங்கினார். பஞ்சாபில் அகாலி தளமும், பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் கூட முதல்வருக்கு எதிராக முன்னெடுக்கத் தவறிய எதிர்ப்பு பரப்புரையை நவ்ஜோத் சித்து முன்னெடுத்தார்.

காங்கிரஸ் தலைமை
சொந்த கட்சியில் இருந்து கொண்டே அந்த கட்சியின் முதல்வருக்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்து குரல் கொடுக்க அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு இருந்தது. இதனால்தான் சித்து தைரியமாக இவ்வாறு அடித்து ஆடினார். இதற்கு பரிசாக காங்கிரஸ் தலைவர் பதவியை காங்கிரஸ் வழங்கியது.

4 மாதங்கள்தான்
பஞ்சாபில் சட்டமன்ற தேர்தலுக்கு 4 மாதங்களே இருக்கும் நிலையில், புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி, தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அமரிந்தர் சிங் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்று, பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைமைக்கு பக்க பலமாக இருக்க வேண்டிய சித்து, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வளர்த்த கடா மார்பில் பாய்ந்துள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications