Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பலத்துக்கு வரும் மாஜி முதல்வர் அமரீந்தர்சிங்கின் பாக். காதலி அரூசா விவகாரம்- பரபரக்கும் பஞ்சாப்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கின் பெண் நண்பரான பாகிஸ்தானை சேர்ந்த அரூசா ஆலம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இடையேயான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பஞ்சாப் உள்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா அதிரடியாக அறிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர்சிங் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன் எனவும் அமரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

இதுவரை அமைதி காத்த காங்கிரஸ் தலைவர்கள், அமரீந்தர்சிங்கின் இந்த அறிவிப்புகளுக்குப் பின்னர் கொந்தளித்து போயுள்ளனர். அமரீந்தர்சிங் தமக்குள் இருக்கும் மதச்சார்பின்மை கொள்கையை தாமே கொன்றுவிட்டார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத் விமர்சித்திருந்தார்.

அமரீந்தர்சிங்- அரூசா ஆலம்

அமரீந்தர்சிங்- அரூசா ஆலம்

பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா, அமரீந்தர்சிங்குடன் கூட்டணி அமைப்பது இருக்கட்டும்.. முதலில் அவருக்கும் பாகிஸ்தானுக்குமான தொடர்பு குறித்து பாஜக விசாரிக்கட்டும் என அதிரடி காட்டியிருந்தார். தற்போது பாகிஸ்தானில் உள்ள பெண் பத்திரிகையாளர் ஆரூசா ஆலம், அமரீந்தர்சிங்கின் மிக நெருங்கிய நண்பர். அவர் பாதுகாப்பு துறை தொடர்பான கட்டுரைகளை எழுதுபவர். ஆரூசா ஆலமுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்குமான தொடர்பு குறித்து விசாரிப்போம் என்றும் சுக்ஜிந்தர் ரந்தாவா கூறியுள்ளார்.

அரூசா ஆலம்- ஐ.எஸ்.ஐ. தொடர்பு

அரூசா ஆலம்- ஐ.எஸ்.ஐ. தொடர்பு

மேலும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்குள் ஆளில்லா விமானங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக கடந்த நான்கரை ஆண்டுகளாக அமரீந்தர்சிங் கூறிவந்தார். அமரீந்தர்சிங் இப்படி கூறியதால்தான் பஞ்சாப்பில் எல்லை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பால் பஞ்சாப் மாநிலத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அமரீந்தர்சிங் கூறியிருக்கிறார். ஆம் அமரீந்தர்சிங் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அதனால்தான் அரூசா ஆலமுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புக்குமான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறோம். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு பஞ்சாப் காவல்துறை தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்றார் சுக்ஜிந்தர்.

அரூசா ஆலம் யார்?

அரூசா ஆலம் யார்?

பாகிஸ்தான் அரசியலில் 1970களில் கோலோச்சியவர் Aqleem Akhta. அவரது மகள்தான் அரூசா ஆலம். அரூசாவின் தாயார் Queen General என அழைக்கப்படும் அளவுக்கு ராணுவத்துடன் நெருக்கமானவராக இருந்தார். இதனால் அரூசா ஆலம், இயல்பாகவே பாதுகாப்புத் துறை தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தார். 1997-ல் பாகிஸ்தானை உலுக்கிய நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டுவந்தவர் அரூசா ஆலம்தான். இதனால் அப்போதைய பாகிஸ்தான் கடற்படை தளபதி Mansurul Haque கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு முதல்வர் அமரீந்தர்சிங்குடன் மிக நெருக்கமாக இருந்து வருகிறார் அரூசா ஆலம். பஞ்சாப் முதல்வராக அமரீந்தர்சிங் பதவியேற்றபோது விவிவிஐபி அந்தஸ்துடன் அமரவைக்கப்பட்டர் அரூசா. அமரீந்தர்சிங், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மகாராஜா வம்சத்தைச் சேர்ந்தவர். பாட்டியாலாவில் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சண்டிகரில் உள்ள அமரீந்தர்சிங் இல்லத்தில்தான் அடிக்கடி அரூசா ஆலம் வந்து தங்குவார். அமரீந்தர்சிங்- அரூசா ஆலம் இடையேயான உறவுக்கு அமரீந்தர்சிங் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் இருக்கின்றனர். பஞ்சாப் அரசியலில் பாகிஸ்தான் எப்போது பேசு பொருளானாலும் அமரீந்தர்சிங்- அரூசா ஆலம் பெயரும் அடிபடாமல் இருப்பது இல்லை.

சித்துவின் ஆட்டம்

சித்துவின் ஆட்டம்

3 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்றிருந்தார் நவ்ஜோத்சிங் சித்து. அப்போது அமரீந்தர்சிங் அமைச்சரவையில் சித்து இடம்பெற்றிருந்தார். பாகிஸ்தான் சென்ற சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை ஆரத்தழுவி உரையாடினார். இதனை அமரீந்தர்சிங் கடுமையாக விமர்சித்தார். அப்போது அமரீந்தர்சிங்குக்கு பதிலடியாக அரூசா ஆலம் விவகாரத்தை பேசியிருந்தார். மேலும் The People's Maharaja என்ற அமரீந்தர்சிங் பற்றிய புத்தகத்திலும் அரூசா ஆலமுடனான அமரீந்தர்சிங் தொடர்பு குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+