ராகுல் என்னை தீவிரவாதி என்கிறார்.. உங்களுக்கு பதில் இருக்கு.. பஞ்சாப் பிரசாரத்தில் கெஜ்ரிவால் ஆவேசம்!
சண்டிகர்: ராகுல் காந்தி என்னை தீவிரவாதி என்கிறார், ஆனால் பிப்ரவரி 20ம் தேதிக்குப் பிறகு எல்லாவற்றுக்கும் விடைதெரியும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு தான் நேரடி போட்டி நிலவுகிறது.
பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கெஜ்ரிவாலை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசி இருந்தார். அதற்கு கெஜ்ரிவால் தற்போது பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பஞ்சாப் தேர்தலில் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் ''என்ன நடந்தாலும், காங்கிரஸ் தலைவரை ஒரு பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது. ஆனால் ஜாதுவின் (ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னம்) தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம். அதுதான் உண்மை'' என ராகுல்காந்தி கூறியிருந்தார்.

பயங்கரவாதி வீட்டில்
2017 தேர்தலின் போது பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் உள்ள முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதியின் வீட்டில் கெஜ்ரிவால் தங்கியிருந்ததை ராகுல் காந்தி இப்படி தெரிவித்திருக்கிறார் என பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மொகாலியில் இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு பதிலளித்துள்ளார்.

கெஜ்ரிவால்
மொகாலியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கெஜ்ரிவால் பேசுகையில், ''ராகுல் காந்தி என்னை தீவிரவாதி என்கிறார். பிப்ரவரி 20ம் தேதிக்கு பிறகு அவருக்கு எல்லாம் புரிய வரும். காங்கிரஸ் கட்சி எல்லாரையும் மிரட்டி வருகிறது. சாதாரண மக்கள், யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லக் கூட பயப்படுகிறார்கள். அந்த அளவு மக்கள் காங்கிரஸ் ஆட்சியில் பயந்துபோய் உள்ளார்கள்.

காங்கிரஸ்
மக்கள் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். என்னை தீவிரவாதி என்கிறார்கள். பிரதமர் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தொழிலதிபர்கள் எல்லோரும் காங்கிரசைப் பார்த்து பயப்படுகிறார்கள். காங்கிரஸ் உட்கட்சிப்பூசலால் அங்கிருந்து பலர், ஆம் ஆத்மிக்கு வருகிறார்கள். ஆம் ஆத்மியை பஞ்சாப் ஏற்றுக்கொண்டதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்று கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications