ஹரியானாவின் அடுத்த முதல்வர் யார்? பாஜகவின் முடிவு இதுதான்.. அக்டோபர் 17 ல் பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் 3வது முறையாக பாஜக வென்று மீண்டும் அரியணை ஏறியுள்ளது. இதையடுத்து ஹரியானா முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி அக்டோபர் 17 ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு மனோகர் லால் கட்டார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

haryana assembly election results 2024 nayab singh saini bjp 2024


கடந்த ஓன்றரை ஆண்டுகளாக அவர் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

ஹரியானாவில் EVM-யை ஹேக் செய்த பாஜக? ஆதாரத்துடன் தேர்தல் ஆணையம் போன காங்கிரஸ்.. பெரும் பரபரப்பு


தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தன. இது பாஜகவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த 10 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாஜக மீது மக்களிடம் அதிருப்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 8 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆனால் ஓட்டு எண்ணிக்கையின்போது தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில் அதன்பிறகு நிலைமை மாறிப்போனது. இறுதியாக கருத்து கணிப்புகளை தாண்டி பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளி்ல் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தியன் தேசிய லோக் தளம் கட்சி 2 தொகுதிகளிலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இதில் இந்தியாவின் பணக்கார பெண் எம்எல்ஏவாக (சுயேச்சை) தேர்வாகி ள்ள சாவித்ரி ஜிண்டால் பாஜகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் பாஜகவுக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 49 ஆக உள்ளது.

ஹரியானாவில் கூட்டணியில் சேர்க்க மறுத்த காங்கிரஸை பழிதீர்த்த அகிலேஷ்- உபி இடைத்தேர்தலில் செம்ம கேம்!


இதன்மூலம் ஹரியானாவில் ஹாட்ரிக் முறையில் 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் தான் ஹரியானாவில் பாஜக வரும் 17 ம் தேதி புதிய ஆட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதோடு முதல்வர் பதவியை தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனிக்கே மீண்டும் வழங்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஹரியானாவில் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்னும் நடைபெற வில்லை. விரைவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் நயாப் சிங் சைனி சட்டசபை பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

முதலில் வரும் 15ம் தேதி ஹரியானாவில் பாஜக ஆட்சியமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அன்றைய தினம் பிரதமர் மோடிக்கு வேறு சில நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் 17 ம் தேதி நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்கும் போது அவருடன் அமைச்சர்களும் பொறுப்பு வகிக்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், பாஜக கூட்டணி கட்சி முதல்வர்கள், தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழா என்பது வரும் 17 ம் தேதி காலை 10 மணிக்கு சண்டிகரில் உள்ள தசரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+