அவ்வளவு பயம்.. பஞ்சாப் டூ அஸ்ஸாம் ஜெயிலுக்கு அம்ரித்பால் சிங் மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானாம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் தீவிரவாதி அம்ரித்பால் சிங் அஸ்ஸாம் மாநிலம் சிறையில் அடைக்கப்பட்டது ஏன் என்பது பொதுவான கேள்வி. அம்ரித்பால் சிங் ஆதரவாளர்களுக்கு அஞ்சியே அஸ்ஸாம் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து சீக்கியர்களுக்கான தனிநாடான காலிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்பது பயங்கரவாதிகளின் குரல். 1980களில் இந்த கோரிக்கைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தியவர் பிந்தரன்வாலே. அவரது இந்த ஆயுதப் போரை முடித்து வைத்தவர் பிரதமராக இருந்த இந்திரா காந்தி. இதனாலேயே இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுப் படுகொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அண்மைகாலமாக காலிஸ்தான் முழக்கம் மீண்டும் பஞ்சாப்பில் கேட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிந்தரன் வாலே பிறந்த ஊரான ரொட் அல்லது ரோட் கிராமத்தில் வாரிஸ் ப்ஞசாப் டி என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக அம்ரித்பால் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்ரித்பால் சிங் மீது 16 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களாக காவல்நிலைய தகர்ப்பு உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதனால் பஞ்சாப் மாநில போலீசார் அம்ரித்பால் சிங்குக்கும் வலை வீசியது.
ஆனால் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு வேடங்களில் பஞ்சாப் மாநிலத்துக்குள் ஓடிக் கொண்டே இருந்தார் அம்ரித்பால்சிங். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முடியாதது தொடர்பாக நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது. அம்ரித்பால் சிங் கூட்டாளிகள் நூற்றுக்கணக்கானோர் ஏற்கனவே கைதும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிந்தரன்வாலேயின் சொந்த கிராமமான ரொட் அல்லது ரோட் கிராமத்தில் நேற்று போலீசார் அம்ரித்பால்சிங்கை கைது செய்தனர். பஞ்சாப்பில் கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங் உடனடியாக அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு அஸ்ஸாமில் ஏன் அம்ரித்பால் சிங் அடைக்கப்படுகிறார் என போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, பஞ்சாப் சிறையில் அவர் அடைக்கப்பட்டால் சிறை உடைப்பு சம்பவங்களுக்கு வாய்ப்பு அதிகம்; சிறையில் இருந்து அம்ரித்பால் தப்பி செல்லவும் சாத்தியங்கள் உண்டு. அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை மீது பயங்கரவாத தாக்குதல் நடக்கக் கூடும். ஆகையால் 160 ஆண்டுகள் பழமையான பாதுகாப்பு அதிகமான திப்ரூகர் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என கூறினர்.
தற்போது திப்ரூகர் சிறையில் அம்ரித்பால் சிங் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே சிறையில் அவரது 9 முக்கிய கூட்டாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். திப்ரூகர் சிறையில் அம்ரித்பால் சிங்கிடம் ரா, ஐபி உள்ளிட்ட விசாரணை ஏஜென்சிகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தவும் உள்ளனர். அம்ரித்பால் சிங்குக்கு பாகிஸ்தான் எப்படி எல்லாம் உதவி செய்கிறது எனவும் விசாரிக்கப்பட இருக்கிறாராம் அம்ரித்பால் சிங்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications