தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை : தமிழகத்தில் 1,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.95 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முற்றிலும் ஒழிந்து விட்டதால் பழையபடி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு இருக்க முடியும் என்பதால் தமிழக கொரோனா அறிக்கையை ஆவலுடன் படித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தினந்தோறும் மாநில சுகாதாரத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை
இதுவரை தமிழகத்தில் 7,95,240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 68,928 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,27,44,479 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அது போல் இன்று 68,494 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆண்கள், பெண்கள்
இதுவரை 1,24,49,252 பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி 10,392 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று 737 ஆண்களுக்கும், 483 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 4,80,467 ஆண்களுக்கும், 3,14,739 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா
இதுவரை 67 அரசு பரிசோதனை மையங்கள், 161 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 228 கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,302 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7,72,995 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவால் 17 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 11,853 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
12 வயதுக்குள்பட்டவர்களில் 14,500 ஆண் குழந்தைகளுக்கும் 13,622 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 28122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 400919 ஆண்களுக்கும், 263023 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் என மொத்தம் 663976 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் 60 வயதுக்குள் மேற்பட்டவர்களில் 65048 ஆண்களுக்கும், 38094 பெண்களுக்கும் என 103142 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications