தமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்
சென்னை : தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.81 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முற்றிலும் ஒழிந்து விட்டதால் பழையபடி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு இருக்க முடியும் என்பதால் தமிழக கொரோனா அறிக்கையை ஆவலுடன் படித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தினந்தோறும் மாநில சுகாதாரத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை
இதுவரை தமிழகத்தில் 7,81,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 62,616 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,20,60,001 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அது போல் இன்று 62,131 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆண்கள், பெண்கள்
இதுவரை 1,17,69,369 பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதனை செய்யப்பட்டது. இன்று 872 ஆண்களுக்கும், 538 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 4,72,430 ஆண்களுக்கும், 3,09,451 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா
இதுவரை 67 அரசு பரிசோதனை மையங்கள், 153 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 220 கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7,59,206 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவால் 9 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 11,712 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
12 வயதுக்குள்பட்டவர்களில் 14,301 ஆண் குழந்தைகளுக்கும் 13,266 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 27567 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,94,925 ஆண்களுக்கும், 2,58,970 பெண்களுக்கும் என மொத்தம் 6,53,929 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் 60 வயதுக்குள் மேற்பட்டவர்களில் 63204 ஆண்களுக்கும், 37215 பெண்களுக்கும் என 1,00,419 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications