10,11,12பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்டான மாணவர்களுக்கு மறுதேர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, மறு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
சென்னை: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, மறு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வு 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதினர்.

இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் 45 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
தற்போது மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வு வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதியும் வெளியாக உள்ளன.
இந்நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, மறு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் முழு விவரங்களை கண்டறிந்து வரும் ஜூலை மாதம் நடக்கக் கூடிய உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதே போல், 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களும் மீண்டும் அழைக்கப்பட்டு உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications