சல்லி சல்லியா நொறுங்கிய எடப்பாடி பிளான்.. தூண்டிலில் மாட்டிய "பெரிய்யய" திமிங்கிலம்.. அப்ப அவ்ளோதானா
எடப்பாடி பழனிசாமி தரப்பின் 2 புள்ளிகள் ஓபிஎஸ் டீம் பக்கம் தாவ போகிறார்களாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள ஆதரவாளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் டீம் இறங்கி வரும் நிலையில், ஒரு மாஜி அமைச்சரும், விரைவில் அணி தாவ இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட சிக்கல்கள் கூடிவிட்ட நிலையிலும்கூட, ஒற்றை தலைமை விவகாரத்தை விட்டுத்தராமல் உள்ளார்.
முக்கியமாக, "ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும், இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இனிமேலும், ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்திலேயே திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

வைத்திலிங்கம்
இந்த வழக்கின் தீர்ப்பானது, இழுத்துக் கொண்ட போகும் என்று சொல்லப்படுகிறது.. அப்படி இழுபறியாகும் பட்சத்தில், எடப்பாடி தரப்பில் இருந்து, ஆதரவாளர்களை தன் பக்கம் இழுப்பதற்கான போதுமான அவகாசம் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையும் என்றே தெரிகிறது.. கடந்த ஒரு மாத காலமாகவே, இது துரிதமாக நடந்து வரும் நிலையில், அதற்கான அசைமென்ட்டும் வைத்திலிங்கத்திடம் ஓபிஎஸ் தந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சேலத்தில் ஒரு மாஜி பெண் அமைச்சர், 4 சென்னை மாவட்ட செயலாளர்கள், இதைதவிர, 15 மா.செ.க்கள் என பலரும் ஓபிஎஸ்ஸுக்கு மறைமுக ஆதரவை தந்துள்ளார்களாம்..

20 புள்ளிகள்
இதைதவிர, தென்மண்டலத்தில் இருக்கும் ஒரு மாஜி அமைச்சரும், கொங்கு மண்டலத்தின் ஒரு மாஜி அமைச்சரும் ஓபிஎஸ் பக்கம் வர தயாராகிவிட்டார்களாம்.. ஆனால், அவர்கள் யார் என்று உறுதியாக தெரியவில்லை.. இப்படிப்பட்ட நேரத்தில்தான், செல்லூர் ராஜு பெயரும் பலமாக அடிபட்டு வருகிறது.. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி அங்கீகரிக்கப்பட்ட சமயத்தில், "அண்ணன் ஓபிஎஸ் அவர்களும் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம்... ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரிவு என்பது அண்ணனுக்கும் தம்பிக்கும் வரும் பிரிவைப் போன்றது தான்" என்றெல்லாம் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசியிருந்தார்.

மதில் மேல் பூனை
மேலும், மதுரை அதிமுகவில், உதயகுமாருடன் "அதிகார அதிருப்தி"யும் ரொம்ப வருடமாகவே இருந்து வருகிறது.. எடப்பாடியும், அதற்கேற்றார்போல், உதயகுமாரையே பல விஷயத்திலும் முன்னிறுத்தி பதவிகளை தந்து வருவதால், செல்லூர் ராஜுவுக்கு இது கடுப்பை தந்துவிட்டதாகவும் தெரிகிறது.. இந்த கடுப்பு + அதிருப்தி + சின்னம்மா பாசம் = இதெல்லாம் சேர்ந்து, ஒருவேளை இவர் ஓபிஎஸ் பக்கம் சாயக்கூடுமோ என்ற மேஜர் டவுட் ஒன்று கிளம்பி உள்ளது.. இந்த பரபரப்பில் இன்னொரு தகவல் வட்டமடிக்கிறது.. இன்னொரு தென்மண்டலத்தை சேர்ந்த மாஜி, ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது..

ஓவர் டோஸ்
அவர் வேறு யாருமில்லை.. வழக்குகளில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் ராஜேந்திர பாலாஜிதானாம்.. கடந்த அதிமுக காலத்தில், எடப்பாடியின் ஆதரவாளராக செயல்பட்டவர் ராஜேந்திரபாலாஜி.. திமுகவையும், ஸ்டாலினையும், ராஜேந்திர பாலாஜி அளவுக்கு வேறு யாரும், கீழ்த்தரமாகவும், தரக்குறைவாகவும், கடுமையாகவும் விமர்சித்தது கிடையாது.. இதெல்லாம் எடப்பாடிக்கு பிளஸ் ஆக இருந்தாலும், ராஜேந்திர பாலாஜியின் விமர்சனங்கள், சற்று ஓவர் டோஸ் ஆகி, எடப்பாடிக்கே சிக்கலை தந்துவிட்டது. "அவரை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க" என்று நெருக்கமானவர்களிடம் எடப்பாடியே புலம்பி சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது.

முடிச்சுகள்
இதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.. ஊழல் பிடியில் ராஜேந்திர பாலாஜி சிக்கினார்.. தலைமறைவானார்.. பிறகு வேறு மாநிலத்தில் கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டு, ஜாமீனிலும் வெளிவந்தார்.. தொடர்ந்து சட்டசிக்கலை சந்தித்து வந்தாலும், சிறையில் தான் இருந்தபோது, தன்னை யாருமே வந்து சந்திக்கவில்லை, தனக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற வருத்தம் ராஜேந்திர பாலாஜிக்கு இருந்தது.. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி இருந்துள்ளது.. இந்த கேஸ் விஷயத்தில், தன்னை கைவிட்டுவிட்டதாக நினைத்துள்ளார்.. இதன்காரணமாகவே, ஓபிஎஸ் பக்கம் தாவ முடிவு செய்துள்ளாராம்..

"மோடி - டாடி - மம்மி"
இதற்கான தூது நடவடிக்கைகளும் நடந்து வருகிறதாம்.. ராஜேந்திர பாலாஜியை பொறுத்தவரை, தீவிரமான மோடியின் விசுவாசி.. சில சமயம் இவர் பேசுவதை பார்த்தால், பாஜக அமைச்சரா, அதிமுக அமைச்சரா என்று குழப்பம் வரும் அளவுக்கு பாஜகவை புகழ்ந்து தள்ளுவார்.. "மோடி - டாடி - மம்மி" - என்ற இவரது கடந்த கால விசுவாச வார்த்தைகளே அதற்கு இன்றுவரை சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, இவர் சசிகலாவின் ஆதரவாளரும்கூட..

ஓபிஎஸ் + சசிகலா
ஜெயிலில் இருக்கும் சசிகலா வெளியே வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே பிரார்த்தனை என்று பலமுறை செய்தியாளர்களிடமே வெளிப்படையாகவும் சொன்னவர். அந்தவகையில், ஓபிஎஸ் + சசிகலா பக்கம் தாவ முடிவெடுத்து, அதற்கான வேலைகளும் நடந்து வருகிறதாம்.. செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி என அடுத்தடுத்த மாஜிக்கள் மற்றும் 10 நிர்வாகிகள் தங்கள் பக்கம் வந்துசேரும் பட்சத்தில், தென்மண்டலத்தில் ஓபிஎஸ் பலம் மேலும் கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications