இந்திரா இருந்திருந்தா விட்டிருக்க மாட்டாங்க! வங்கதேசத்தில் இந்தியா செய்த 10 தவறுகள்! மொத்தமா போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை; கடந்த சில ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகள்மற்றும் இந்தியா இடையிலான உறவு உடைந்தது. நேபாளம் மற்றும் இலங்கையுடனான உறவும் சமீபத்தில் பாதிக்கப்பட்டது. இது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தோல்வியாக பார்க்கப்படுகிறது. இப்போது வங்கதேச விவகாரத்திலும் இந்தியா 10 பெரிய தவறுகளை செய்துள்ளது.

வங்கதேசத்தில் நான்கு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் நீண்ட தலைவர் ஷேக் ஹசீனா தற்போது ராஜினாமா செய்துள்ளார். நாட்டை விட்டும் வெளியேறி உள்ளார். ஒரு மாத காலமாக நீடிக்கும் வன்முறை மற்றும் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று நாட்டை விட்டு வெளியேறினார்.

bangladesh sheikh hasina

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த காரணத்தால் இரண்டு நாட்டு உறவு உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஷேக் ஹசீனா வெளியேற்றம் காரணமாக இந்தியா வங்கதேசம் உறவு இனி நீடிக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இப்போது வங்கதேச அரசு உடைய காரணம் அமெரிக்கா செய்த வேலை அல்லது சீனா செய்த வேலை என்று கூறப்படுகிறது. இரண்டில் ஒரு நாடு பாகிஸ்தான் மூலமாக வங்கதேச ஆட்சியை கவிழ்த்து உள்ளது.

இதை இந்தியா கணிக்க தவறிவிட்டது. இல்லையென்றால் இந்தியா இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட தவறிவிட்டது என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் இந்தியா முக்கியமான சில தவறுகளைசெய்து உள்ளது.

1. வங்கதேசத்தில் இப்படி ஒரு புரட்சி நடக்க போவதை முன்கூட்டியே இந்தியா உணர்ந்திருக்க வேண்டும். உளவுத்துறையில் மூலம் முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும்.

2. முன்கூட்டியே தெரிந்து இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் அது இந்தியாவின் தவறு. அப்படி தெரிந்திருந்த பட்சத்தில் கலவரம் கைமீறாமல் இருக்க உதவிகளை வழங்கி இருக்க வேண்டும்.

3, அங்கே அமையும் புதிய அரசாவது இந்தியாவிற்கு நட்பாக இருக்கும்படி பார்த்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் செய்யவில்லை.

4. தெற்காசியாவில் இந்தியாவின் எல்லை நாடுகளில் வங்கதேசம் மட்டுமே இந்தியாவிற்கு நட்பாக இருந்தது. அதை அப்படியே நீட்டிக்க இந்தியா போதுமான பணிகளை செய்யவில்லை.

5. நேற்று நிலைமை மோசமாகி ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. அந்த அளவிற்கு இந்தியா விட்டிருக்க கூடாது.

6. கடந்த வருடம் மட்டும் ஷேக் ஹசீனாவை மோடி 10 முறை சந்தித்தார். அப்போதே இது போன்ற விஷயங்களை இந்தியா பேசி தயாராகி இருக்க வேண்டும்.

7. இப்போது வங்கதேசத்தில் நடக்கும் விஷயங்களுக்கு பின் சீனா இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சீனாவை இந்த அளவிற்கு இந்தியா கைநீட்ட விட்டு இருக்க கூடாது.

8. ஷேக் ஹசீனா இந்தியாவின் நம்பகமான கூட்டாளிகளில் ஒருவராக இருந்து வந்தார். தெற்காசியாவில் உள்ள நாடுகளை எல்லாம் சீனா தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்ட நிலையில், இந்தியாவுடன் வங்கதேசம் மட்டுமே நெருக்கமாக இருந்தது.

9. வங்கதேசம் என்ற நாடு உருவாக இந்தியாதான் காரணம். அமெரிக்கா, சீனாவை எதிர்த்து இந்தியா வங்கதேசம் உருவாக காரணமாக இருந்தது. இதற்கு இந்திராகாந்தியின் அரசியல் சாணக்யத்தனம் காரணம். தற்போது அது மிஸ்ஸிங்.

10. கடந்த சில ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகள்மற்றும் இந்தியா இடையிலான உறவு உடைந்தது. நேபாளம் மற்றும் இலங்கையுடனான உறவும் சமீபத்தில் பாதிக்கப்பட்டது. இது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தோல்வியாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+