பிஆர் அரசியல் + சொகுசாக வந்தது + பொறுப்பே இல்லை.. கரூர் கொடூரம்.. விஜய் செய்த 10 பெரிய தவறுகள்!
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்பட்ட நடிகர் விஜயின் கூட்டத்தில் 40 பேர் வரை பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அரசியல் தெரியாத ரசிக வெறி கூட்டத்தின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் இத்தனை பேரின் உயிர் போய் உள்ளது. அரசியல் தெரியாத கூட்டத்தை ரசிக்கும்.. ஒரு So called அரசியல் தலைவரின் செயலால் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த கூட்டத்தில் 40 பேர் வரை பலியானதற்கு பின் 10 முக்கியமான காரணங்கள் உள்ளன.
1. விஜய் தமாதமாக வந்தது
விஜய் இந்த கூட்டத்திற்கு தாமதமாக வந்தது முதல் காரணம். அதாவது அவர் காலை 8.15 மணிக்கு நாமக்கல்லில் கூட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் வீட்டில் இருந்தே பொறுமையாக 8.45க்குத்தான் கிளம்பினார். இதனால் மாலை கரூர் கூட்டத்திற்கு 3-4 மணிக்கு வந்துவிட்டு 4.30க்குள் கிளம்ப வேண்டியர்.. 7 மணிக்கு வந்து 7.45 அளவில் அங்கிருந்து சென்றார். அவர் தாமதமாக வந்ததால் மக்கள் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து.. நிறைய பேர் கூடி.. அதுவே கூட்ட நெரிசலுக்கு காரணமாக மாறியது.
2. களேபரத்துக்கு இடையே கூட்டத்தில் தொடர்ந்து பேசியது
அங்கே பெரிய கூட்ட நெரிசல் காரணமாக களேபரம் ஏற்பட்டது. மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். ஆம்புலன்ஸ் கூட வந்தது. ஆனால் அதற்கு இடைய விஜய்.. உங்களுக்கு என்ன நடந்தால் என்ன.. நான் எழுதிக்கொடுத்ததை பேசிட்டு போயிடுறேன் என்று நின்று பேசிக்கொண்டு இருந்தார். அவர் முன்பே சுதாரித்து இருந்தால் கூட இவ்வளவு பெரிய கொடூரம் நடந்திருக்காது.

3. முன்பே கண்ணாடியை இறக்காமல் அலைய விட்டது
விஜய் தன்னுடைய வாகனத்தின் கண்ணாடியை முன்பே இறக்கி இருந்தால்.. அவரை பார்த்த ரசிகர்கள் பலர் வெளியேறி இருப்பார்கள். ஆனால் விஜய் கண்ணாடியை மூடாமல் வந்தார். இதனால் ரசிகர்கள் அவர் முகத்தை பார்க்க வேண்டும் என்று வாகனம் பின் ஓடி வந்தார்கள். இதனால் கூட்டத்தின் அளவு அதிகரித்தது. வாகனம் அருகே கூட்டம் நிரம்பியதால்.. அதுவே தள்ளுமுள்ளுவிற்கு காரணமாக மாறிவிட்டது.
4. நிர்வாகிகள் & கூட்டத்திற்கு உத்தரவிட தவறியது
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 10 ஆயிரம் பேர் வர வேண்டிய இடத்தில் போலீஸ் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கணித்து ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் வந்தது 30 ஆயிரம் பேர். இதற்கு இடையே அங்கே இருந்த விஜய் ரசிகர்கள்.. இங்கும் அங்கும் தாவுவது, மரம் மேல் ஏறுவது, மின்சார கம்பி மேல் ஏறுவது என்று அணில்கள் போல செயல்பட்டனர். சிலர் ஜெனரேட்டர் அறைக்கு கூட உடைத்துக்கொண்டு சென்றனர். இவர்களை எல்லாம் விஜய் கட்டுப்படுத்தவில்லை.. விஜயின் வலது கை, இடது கையான ஆதவ் அர்ஜுனா, அருண் போன்றர்வர்களும் கூட கூட்டத்தை கண்காணிக்கவில்லை.
5. மக்கள் அணுக முடியாமல் இருப்பது
விஜய் மக்களால் அணுக முடியாத தலைவராக இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், கருணாநிதி போன்றவர்களை மக்கள் எளிதாக சந்திக்க முடியும். அவர்கள் அருகில் இருந்து பேச முடியும். இதனால்தான் அவர்கள் பொதுவில் வந்தால் ரசிகர்கள் போல மக்கள் துரத்திக்கொண்டு வரவில்லை. ஆனால் விஜய் இப்போதும் ஹீரோ போல.. மக்களை நெருங்காமல் இருக்கிறார். இதனால்தான்.. அவர் வந்தால்.. எப்படியாவது இந்த முறை பார்த்துவிட வேண்டும் என்று ஓடி வருகிறார்கள். மக்கள் அணுக கூடிய தலைவராக விஜய் இருந்தால்.. மக்கள் இப்படி ஓடி வர வேண்டியது இல்லை.
6. வீட்டிற்கு வேக வேகமாக ஓடியது
விஜய் இத்தனை களேபரத்திற்கு பின் கரூரில் இருந்து கட்சி மூத்த நிர்வாகிகளை மருத்துவமனைக்கு அனுப்பாமல்.. பயந்துகொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதுவும் பிரைவேட் ஜெட்டில் அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றுவிட்டார்.
7. செய்தியாளர்களை சந்திக்காமல் போனது
இது போன்ற நேரத்திலாவது ட்விட்டர் அரசியல் செய்யாமல்.. செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்க வேண்டும். ஆனால் விஜய் இப்போதும் கூட செய்தியாளர்களை சந்தித்து ஒரு இரங்கல் கூட சொல்லாமல்.. பதில் அளிக்காமல் ஓடி விட்டார்.
8. பிஆர் அரசியல் அசிங்கம்
விஜயின் பிம்பம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக பிஆர் கும்பல் களமிறக்கப்பட்டு உள்ளது. விஜய்க்கு ஆதரவாக பெரிய பிஆர் படம் களமிறங்கி உள்ளது. We stand with Vijay என்று சொல்லிவைத்தார் போல இவர்கள் போஸ்ட் போட்டு வருகிறார்கள். விஜயை பற்றி இதற்கு முன் பேசாத பல PR BOT ஐடிக்கள், முக்கியமாக தமிழக ஆசியால் பற்றியே பேசாத பல PR BOT ஐடிக்கள் இப்போது விஜய்க்கு ஆதரவாக நிற்கிறோம் என்று பேச தொடங்கி உள்ளன. மக்கள் பலியான சோகமான நேரத்தில்.. விஜய்க்கு ஆதரவாக.. களமிறங்கிய வடஇந்திய பிஆர் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். விஜய்க்காக அரசியல் திட்டங்களை வகுக்கும் குழு இது போன்ற மோசமான, அருவெறுப்பான செயலை செய்திருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மக்கள் பலியான ரத்தத்தின் ஈரம் கூட காயவில்லை.. அதற்குள் உங்களுக்கு PR அரசியல் கேட்கிறதா என்று கடுமையான விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.
9. தொண்டர்களை அரசியல்படுத்தாமல் போனது
தொண்டர்களை அரசியல்படுத்தாமல் விஜய் செயல்படுவது ஒரு தவறு. இவர்கள் எல்லாம் ரசிகர்களாகவே இருக்கும். அணில் போல தாவட்டும். அரசியல் தெரிய வேண்டாம் என்று விஜயும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அடாவடித்தனத்தை நல்ல விஷயம் என்று விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதுவே இது போன்ற ஒழுக்கமற்ற செயலுக்கு காரணமாக மாறிவிட்டது.
10. கொடுத்த இடம் சரியானது - அரசின் கட்டுப்பாடுகளை மீறுவது
கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இரண்டு இடமுமே குறுகிய இடம் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விளக்கம் அளித்து உள்ளார். கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இரண்டு இடமுமே குறுகிய இடம் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விளக்கம் அளித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம்.
கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடம் லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிதான் இந்த இரண்டு இடமுமே குறுகிய இடம். ஏற்கெனவே தவெக சார்பில் நடந்த பரப்புரையில் கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த இடம் போதாது என்று கூறினோம். அதற்கேற்ப தற்போதைய இடமான வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது. தற்போதைய இடத்தில்தான் இரண்டு நாட்களுக்கு முன் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்புரை செய்திருக்கிறது 10,000 பேர் வருவார்கள் என சொன்னார்கள். ஆனால் 10,000-ஐ விட அதிகமாக எதிர்பார்த்துதான் காவல்துறையினர் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் 27,000 பேர் வரை வந்தார்கள், என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications