Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகோவின் சொந்த ஊர்! கலிங்கப்பட்டி உள்பட 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருது அறிவித்தது தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக, ஒற்றுமையினையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் வைகோவின் கலிங்கப்பட்டி ஊராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய, சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும்.

உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகள் மூலம் இந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும். 2025-2026-ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் கூறப்பட்டிருப்பதாவது:-

10-village-panchayats-selected-for-social-harmony-awards-each-to-receive-1-crore-incentive

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது

சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக, ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய, சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகள் மூலம் இந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும். மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின்படி பின்வரும் மூன்று நிலைகளின்படி சமூக நல்லிணக்க ஊராட்சி விருது ஆணை பெறுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. ஊராட்சிகள் தேர்வுசெய்ய

1. சமூக நல்லிணக்க ஊராட்சி விருதினை பெறுவதற்கு, ஊராட்சிகள் குறிப்பிடப்படும் இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கால வரையறை துறையின் அறிவிப்புடன் இணைத்து வழங்கப்படும். ஊராட்சிகள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் ஊராட்சிகளைப் பரிந்துரைக்கலாம். விண்ணப்பங்களுடன் உரிய புகைப்படங்களையும், ஆவணங்களையும் இணைப்பது அவசியம்.

2. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும், கூர்ந்தாய்வு குழு மதிப்பீடு மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களை அரசிடம் சமர்ப்பிக்கும்.

3. அரசு செயலாளர் தலைமையிலான தேர்வுக்குழு சிறந்த பத்து ஊராட்சிகளை தேர்வு செய்யும். 23 மாவட்டங்களிலிருந்து 25 கருத்துரு மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து 2 கருத்துரு பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆதிதிராவிடர் நல ஆணையரின் 15.09.2025 நாளிட்ட கடிதத்தின்படி, சமூகநீதி மற்றும் சமத்துவம் மையமானது.

2025-2026-ம் ஆண்டுக்கான விருது பெறுவதற்கான ஊராட்சிகளை தேர்வு செய்யும் பொருட்டு, சமூக நல்லிணக்க ஊராட்சிகள் விருது தேர்விற்கு பல்வேறு துறைகளில் பணிபுரியும் கல்வியாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இயங்கிவரும் சிறப்பு வல்லுனர்களைக் கொண்ட மதிப்பீட்டுக்குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது 23 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 25 ஊராட்சிகளுக்கு சென்று, தமிழ்நாடு அரசு சமூக நல்லிணக்க கிராமங்களுக்கென வரையறுக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் கிராம மக்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளான மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு, மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அதிகாரிகளோடும் நேரடியாக களத்திலும் ஆய்வு மேற்கொண்டது. அதனடிப்படையில் மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

4. சமூகநீதி மற்றும் சமத்துவம் மையத்தின் மதிப்பீட்டு குழுவின் அறிக்கை மற்றும் மாநில அளவிலான இறுதித் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளதை ஏற்று, 2025-2026-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது வழங்குவதற்கு பின்வரும் ஊராட்சிகளை தேர்வு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகள்

1. ராமநாதபுரம் - மேலமடை
2. விழுப்புரம் - பரையனந்தாங்கல்
3. தென்காசி - கே. ஆலங்குளம்
4. தஞ்சாவூர் - சூரியனார்கோவில்
5. சேலம் - மணிவிழுந்தன்

6. தஞ்சாவூர் - வெங்கடசமுத்திரம்
7. செங்கல்பட்டு -மண்ணிவாக்கம்
8. கோயம்புத்தூர் - ஒட்டர்பாளையம்
9. தென்காசி - கலிங்கப்பட்டி
10. நாகப்பட்டினம் - தேவூர் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+